AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Retro : சூர்யாவின் கம்பேக்.. ரெட்ரோ படத்தின் நியூ அப்டேட் இதோ!

Retro Movie New Update : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்திலும், நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பிலும் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த படத்தில் முன்னணி கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படமானது விரைவில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்திலிருந்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Retro : சூர்யாவின் கம்பேக்.. ரெட்ரோ படத்தின் நியூ அப்டேட் இதோ!
ரெட்ரோ திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Apr 2025 15:08 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ரெட்ரோ (Retro). கடந்த 2024ம் ஆண்டு வெளியான கங்குவா படத்தினை தொடர்ந்து இந்த படத்திலும் சூர்யா கதாநாயகனாக நடித்து வந்தார்.  இந்த படத்தின் ஷூட்டிங்கும் கடந்த 2024ம் ஆண்டிலே நிறைவடைந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் சிறப்பாக நடந்து வந்தது. இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி மக்களிடையே மிகவும் பிரபலமானது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது அதைத் தொடர்ந்து இந்த படத்திலிருந்து தற்போது புதிய தகவலானது வெளியாகியுள்ளது. சூர்யாவின் ரெட்ரோ படத்திற்குத் தணிக்கை குழு (censor board) யு/ஏ தரச் சான்றிதழை வழங்கியுள்ளது.

மேலும் இந்த படத்தின் நேரம் சுமார் 2 மணிநேரம் 48 நிமிடங்கள் உள்ளதாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. முற்றிலும் ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படம் , சூர்யாவின் சில தோல்வி படங்களுக்குப் பின் கம்பேக் படமாக அமையும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

ரெட்ரோ படத்தின் புதிய அப்டேட் :

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்திலிருந்து இதுவரை 3 பாடல்களை வெளியாகியுள்ளது. வெளியான இந்த 3 பாடல்களும் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் சூர்யாவின் இந்த படமானது காதல், நகைச்சுவை, மற்றும் ஆக்சன் என மூன்று ஜானரிலும் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா இணைந்த முதல் படம் என்பதால், தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. சூர்யாவின் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இது இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள 3வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இந்த படத்தை, சூர்யா தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. அதைத் தொடர்ந்து நடிகை ஷ்ரேயா சரணும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 2025, ஏப்ரல் 18ம் தேதியில் மாலையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் புதிய படங்கள் :

கங்குவா திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு,  ரெட்ரோ படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என்று சூர்யா ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, சூர்யா 45, சூர்யா46 மற்றும் வாடிவாசல் என அடுத்தடுத்த படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

Follow Us