நல்ல எதிர்காலத்திற்காக என் உரிமையும் கடமையும் நிறைவேற்றினேன் – நடிகர் சூரி

Actor Soori X Post About TN Assekbly Elections: தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் மிகவும் பரபரப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் தனது ஜன நாயகக் கடமையை ஆற்றிய பிறகு நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகின்றது.

நல்ல எதிர்காலத்திற்காக என் உரிமையும் கடமையும் நிறைவேற்றினேன் - நடிகர் சூரி

நடிகர் சூரி

Published: 

23 Apr 2026 15:15 PM

 IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக கலக்கி வருகிறார் நடிகர் சூரி. இவர் சினிமாவில் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் அவரது கடின உழைப்பு மட்டுமே. சினிமாவில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்று தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படித்து சினிமாவில் கூட்டத்தில் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு இருந்த இவர் பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான வெண்ணிலா கபடி என்ற படத்தில் பரோட்டா சாப்பிடும் காமெடியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்தார்.

இந்த நிலையில் தொடர்ந்து நடிகர் சூரி காமெடியனாக பல ஹிட் படங்களை கொடுத்து வந்த சூரி தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார். அதன்படி இவர் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் பிசியாக நடித்து வரும் நடிகர் சூரி தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த பிறகு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நல்ல எதிர்காலத்திற்காக என் உரிமையும் கடமையும் நிறைவேற்றினேன்:

அந்த வகையில் நடிகர் சூரி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, நான் என் வாக்கை பதிவு செய்தேன்… நல்ல எதிர்காலத்திற்காக என் உரிமையும் கடமையும் நிறைவேற்றினேன். நம்ம நாளையை தீர்மானிக்கும் சக்தி ஒரு வாக்கில்தான் இருக்கிறது தவற விடாதீர்கள் என்றும் அந்தப் அப்திவில் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… லியோ படத்தின் இண்டர்வல் சீன் முன்னாடி யோசிச்சது வேற – இயக்குநர் ரத்னகுமார் ஓபன் டாக்

நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் பட கசிவு… வேதனையுடன் பேசிய நடிகை மமிதா பைஜூ

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..