பரோட்டா சூரி டூ கலக்கல் நாயகன்… நடிகர் சூரியின் பிறந்த நாள் இன்று!

Happy Birthday Actor Soori: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த நடிகர் சூரி தற்போது நாயகனாகவும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பரோட்டா சூரி டூ கலக்கல் நாயகன்... நடிகர் சூரியின் பிறந்த நாள் இன்று!

சூரி

Updated On: 

27 Aug 2025 13:11 PM

சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பல வேலைகளை செய்துள்ளதாக நடிகர் சூரி (Actor Soori) பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். சினிமாவில் நடிப்பு மட்டும் இன்றி பல வேலைகள் உள்ளது. ஒரு படத்தை எடுக்க நடிகர்கள் மட்டும் போதாது லைட் மேன் முதல் பல டெக்னிசியன்கள் தேவைப்படுவார்கள். அப்படி சினிமாவில் என்ன வேலை எல்லாம் கிடைக்கிறதோ அதனை அனைத்தையும் செய்து வந்துள்ளார் நடிகர் சூரி. படத்தில் எதாவது ஒரு ஓரத்திலாவது தெரிந்துவிடுவோமா என்ற ஆசையில் அவர் கடினமாக உழைத்து வந்துள்ளார். இந்த நிலையில் சினிமாவிற்குள் அவர் அறிமுகம் ஆகும் காலமும் வந்தது. முன்பு திரைப்படங்களில் க்ரவுட் ஆர்டிஸ்ட் என்று கூறுவார்கள் அதாவது அவர்களுக்கு கதாப்பாத்திரம் என்று பெரிதாக எதுவும் இருகாது கூட்டத்தில் நிற்பது போன்ற காட்சிகளே வழங்கப்படும்.

அப்படி சினிமாவிற்குள் அறிமுகம் ஆன சூரி 1998 முதல் 2008 வரை தனது நடிப்பு வாழ்க்கையை அப்படியே ஓட்டியுள்ளார். இந்தப் பத்து ஆண்டுகளில் அவர் பலப் படங்களில் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களிலேயே நடித்துள்ளார். இப்படி இருந்த சூழலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் சூரியின் வாழ்க்கை மாறத் தொடங்கியது.

வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் பிரபலம் ஆன சூரி:

தொடர்ந்து 10 ஆண்டுகளாக சினிமாவில் ஒரு அடையாளத்திற்காக காத்திருந்த சூரிக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது வெண்ணிலா கபடிகுழு படம். இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகர் சூரி அவரது நண்பனாக காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்தப் படத்தில் நடிகர் சூரி ஒல்லியான உடல் அமைப்புடன் இருந்தாலும் சாப்பிடுவதில் இவரை யாராலும் தோற்கடிக்க முடியாது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சூரி பரோட்டா சாப்பிடும் போட்டி ஒன்றில் கலந்துகொள்வார். அதில் இவர் பரோட்டாவை ஒரு கட்டு கட்டும் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் இவரை பரோட்டா சூரி என்று அழைக்கத் தொடங்கினர்.

அந்தப் படத்திற்கு பிறகு பல காமெடிப் படங்களில் நடித்தார் நடிகர் சூரி. பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடிக்கத் தொடங்கிய நடிகர் சூரி பிசியான நடிகராக கோலிவுட் சினிமாவில் வலம் வரத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் சூரி இல்லாத படம் கோலிவுட்டில் ரிலீசாகாது என்பது போல தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

Also Read… மதராஸி படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் ஏ.ஆர்.முருகதாஸ் தான் – பிஜு மேனன்

விடுதலை மூலம் நாயகன் அவதாரம் எடுத்த சூரி:

காமெடியனாக பலப் படங்களில் ஹிட் கொடுத்த நடிகர் சூரி இயக்குநர் வெற்றிமாறன் கண்ணுக்கு நாயகனாக காட்சியளித்தார். ஆம் அனைத்து இயக்குநர்களும் சூரியை காமெடியனாக பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் சூரியை நாயகனாக பார்த்த வெற்றிமாறன் அவரை தனது இயக்கத்தில் வெளியான விடுதலைப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆக்கினார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார் சூரி.

அதன்படி நடிகர் சூரி விடுதலைப் படத்திற்கு பிறகு கருடன், கொட்டுக்காளி, விடுதலை பாகம் இரண்டு, மாமன் என தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார். நாயனாக நடிக்கத் தொடங்கியப் பிறகு நடிகர் சூரி காமெடியனாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூரியின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… இந்த போட்டோஸ் எல்லாம் 7 வருஷத்துக்கு முன்னாடி எடுத்ததா? இணையத்தில் கவனம் பெரும் ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டா போஸ்ட்!