Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Retro And Hit 3 : ரெட்ரோ மற்றும் ஹிட் 3 மோதல்… நடிகர் நானி கொடுத்த க்யூட் கமெண்ட் !

Retro And Hit 3 Clash : டோலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகனாகக் கலக்கி வருபவர் நடிகர் நானி. இவரின் முன்னணி நடிப்பில் தற்போது ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் ஹிட் 3 . இந்த திரைப்படமானது பல்வேறு மொழிகளில் சிறப்பாக வெளியாகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் சூர்யாவின் ரெட்ரோ படமும் வெளியாகின்ற நிலையில், நடிகர் நானி சொன்ன கருத்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

Retro And Hit 3 : ரெட்ரோ மற்றும்  ஹிட் 3 மோதல்… நடிகர் நானி கொடுத்த க்யூட் கமெண்ட் !
ரெட்ரோ மற்றும் ஹிட் 3 Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 23 Apr 2025 23:25 PM

தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இருந்து வருபவர் நானி (Nani). இவரின் திரைப்படங்களுக்கு ஒட்டு மொத்த இந்தியா முழுவதும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். இவரின் நடிப்பில் தற்போது ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் ஹிட் 3 (Hit 3). இந்த திரைப்படமானது ஹிட் திரைப்பட தொகுப்பில் 3வது பாகம் ஆகும். இந்த படத்தை பிரபல கோலிவுட் இயக்குநர் சைலேஷ் கொலானு  (Sailesh Kolanu) இயக்கியுள்ளார். இந்த படமானது அதிரடி வன்முறைகளுடன் மிகவும் மாறுபட்ட கதைக்களத்துடனும் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது படம் வெளியானதால் தெரியும். இந்த படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நானி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நேர்காணலில் நடிகர் நானி ரெட்ரோ (Retro)திரைப்படமும், ஹிட் 3 படமும் ஒன்றாக வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் நிச்சயமாக வெற்றிபெறும் என்று அவர் க்யூட்டாக, எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் பேசியிருந்தார். தற்போது அது குறித்து முழுமையாக பார்க்கலாம்.

நடிகர் நானி பேசியிருந்த வீடியோ ;

இந்த வீடியோவில் நடிகர் நானி ” இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் திரைப்படங்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும், அவருடன் திரைப்படத்தில் இணைவது குறித்துப் பேசிவருகிறேன். தற்போது அந்த படம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. மேலும் அவரின் ரெட்ரோ திரைப்படமானது வரும் மே மாதம் வருகிறது. நானா நடித்த ஹிட் 3 மற்றும் ரெட்ரோ படமானது ஒரே நாளில் வெளியாகிறது. கார்த்திக் சுப்புராஜ் அதை என்னிடம் கூறியிருந்தார். இந்த இரு படங்களும் கண்டிப்பாக வெற்றிபெறும் என்று நான் நினைக்கிறேன். நான் நடிகர் சூர்யா சார் மீது மிகுந்த மரியாதையை வைத்திருக்கின்றேன், அதுபோல கார்த்திக் சுப்புராஜின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படத்தை எவ்வாறு இயக்குகிறார், கையாளுகிறார் என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றுதான் என்று நடிகர் நானி தெரிவித்திருந்தார்.

ரெட்ரோ திரைப்படம் :

சூர்யாவின் முன்னணி நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்திலும் உருவாகியுள்ள படம் ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவின் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படமானது முழுக்க முழுக்க காதல், மற்றும் ஆக்ஷ்ன் காட்சிகளுடன் உருவாகியுள்ளது. இந்த படத்திற்குத் தணிக்கை குழு யு/ஏ தரச் சான்றிதழை கொடுத்துள்ளது.

மேலும் இந்த படத்தில் வரும் கெட்டவார்த்தைகளுக்கு மியூட் செய்யுமாறும் கூறியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்துடன்தான் நானியின் ஹிட் 3 படம் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...