Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மேத்யூ தாமஸ் நடிப்பில் வெளியானது ’லவ்லி’ படத்தின் ட்ரெய்லர்

Lovely - Official Trailer | இந்தப் படத்தில் நடிகர் மேத்யூ தாமஸ் உடன் இணைந்து நடிகர்கள் உன்னிமய பிரசாத், மனோஜ் கே ஜெயன், அஸ்வதி மனோகரன், ராதிகா, பிரசாந்த் முரளி, பாபுராஜ், ஜோமோன் ஜோதிர், அருண் பிரதீப், ஸ்ரீஜித் ரவி, ஜெயசங்கர், ஆஷ்லின், அருண் ஆகியோர் நடித்திருந்தனர்.

மேத்யூ தாமஸ் நடிப்பில் வெளியானது ’லவ்லி’ படத்தின் ட்ரெய்லர்
மேத்யூ தாமஸ்Image Source: twitter
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Apr 2025 15:30 PM IST

இயக்குநர் மது சி நாராயணன் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கும்பளங்கி நைட்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் மேத்யூ தாமஸ். இந்தப் படத்தில் 4 சகோதரர்களில் நான்காவது சகோதரராக நடித்திருப்பார். இந்தப் படமே மேத்யூ தாமஸ் அறிமுக காட்சியிலேயே தொடங்கும். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் மேத்யூ தாமஸ் நடிப்பில் வெளியான தண்ணீர் மதன் தினங்கள், அஞ்சாம் பாத்திரா, ஆப்ரேஷன் ஜாவா, ஒன், ஜோ அண்ட் ஜோ, கிருஷ்ட்டி, நெய்மர் என தொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் கடந்த 2023-ம் ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் மேத்யூ தாமஸ்.

இந்தப் படத்தில் நடிகர் விஜயின் மகனாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார் நடிகர் மேத்யூ தாமஸ். இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்திருதார். பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் நாயகனின் நண்பனாக மேத்யூ தாமஸ் நடித்திருந்தார்.

படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் நடிகர் மேத்யூ தாமஸின் நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் மேத்யூ தாமஸ் மாதிரி ஒரு நண்பர் கிடைக்க வேண்டும் என்று கூறும் அளவிற்கு அவரது நடிப்பு சிறப்பானதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடிகர் மேத்யூ தாமஸ் மலையாளத்தில் லவ்லி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் திலீஸ் நாயர் இயக்கியுள்ளார்.

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். படம் வருகின்ற மே மாதம் 2-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் இருந்து கனடாவிற்கு செல்ல நடிகர் மேத்யூ தாமஸ் ஆசைப்படுகிறார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவர் ஜெயிலுக்கு செல்ல நேரிடுகிறது. அப்போது ஜெயிலில் அவருடன் ஒரு ஈ பேசுகிறது. முதலில் அதனை நம்பாத மேத்யூ பிறகு அந்த ஈ உடன் பேசி பழகுகிறார். அது அவருக்கு மிகவும் பிடித்த விசயமாக மாறுகிறது. அதனை தொடர்ந்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதையாக அந்த ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது.