அந்த ஒரு விசயத்துகாகவே விஜய் சிஎம் சீட்ல உக்கார்வதை பாக்கனும் – நடிகர் மகேந்திரன்
Actor Mahendran about Vijay Politics: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேந்திரன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் விஜய் அரசியல் வருகை குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

மகேந்திரன் - விஜய்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேந்திரன். இவர் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான நாட்டாமை என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். அதன்படி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் வில்லன் பொன்னம்பளம் ஒரு பெண்ணை கடத்தி சென்றி பாலியல் வன்கொடுமை செய்துவிடுவார். இந்த வழக்கு பஞ்சாயத்திற்கு வரும் போது அந்த சம்பவத்தை பார்த்த சாடியாக மகேந்திரன் நடித்து இருப்பார். அந்த காட்சியில் குழந்தையாக இருந்த மகேந்திரன் சொல்லும் வசனம் தற்போதுவரை ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே மகேந்திரன் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து மகேந்திரன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக பலப் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து 1994-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை சுமார் 12 ஆண்டுகள் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மகேந்திரனை மாஸ்டர் மகேந்திரன் என அழைக்கப்பட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் மகேந்திரன். அதன்படி இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் மகேந்திரன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
நடிகர் விஜய் சிஎம் சீட்ல உக்கார்வதை பாக்கனும்:
அதன்படி நடிகர் மகேந்திரன் அளித்தப் பேட்டியில் கூறியதாவது, எத்தனை சினிமா பிரபலங்கள் அரசியலில் நுழைவார்கள் அல்லது அப்படிச் செய்வதற்குத் துணிச்சல் கொண்டிருப்பார்கள் என்று நமக்குத் தெரியாது, ஆனால் தளபதி விஜய்க்கு அந்தத் துணிச்சல் இருக்கிறது. அந்தத் துணிச்சலுக்காகவே, அந்த தைரியத்திற்காகவே, அவர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதைப் பார்க்க நான் விரும்புகிறேன் என்று மகேந்திரன் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Jiiva: ஜாலியா இருந்த ஒருத்தன் படம் எப்போது ரிலீஸ் – ஹேப்பி நியூஸ் சொன்ன ஜீவா!
இணையத்தில் வைரலாகும் மகேந்திரனின் பேச்சு:
.@Actor_Mahendran: We don’t know how many cinema celebrities will step into politics or have the guts to do so, but Thalapathy Vijay has that guts. 😎 Just for “antha dhill’uh kagavae, dhairiyathirkagavae”, I wish to see him to sit on the CM Chair.🪑😍🔥
pic.twitter.com/gI8hIEUqdw— KARTHIK DP (@dp_karthik) January 19, 2026
Also Read… Keerthy Suresh: மீண்டும் பாலிவுட் பக்கம் திரும்பிய கீர்த்தி சுரேஷ்.. அட இந்த நடிகருக்கு ஜோடியாகவா?