Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

K Manikandan: நான் கனவுல கூட நினைக்கல .. சூர்யா பற்றி மணிகண்டன் நெகிழ்ச்சி!

K Manikandan Praises Suriyas Honesty : சினிமாவில் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவந்தவர்தான் கே மணிகண்டன். இவர் தற்போது வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சூர்யா செய்த விஷயம் குறித்துப் பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

K Manikandan: நான் கனவுல கூட நினைக்கல .. சூர்யா பற்றி மணிகண்டன் நெகிழ்ச்சி!
சூர்யா - கே மணிகண்டன் Image Source: Social Media
barath-murugan
Barath Murugan | Published: 10 May 2025 23:01 PM

கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்கள் பட்டியலில் இருந்து வருபவர் கே மணிகண்டன் (K Manikandan). இவை ஆரம்பத்தில் சினிமாவில் உதவி இயக்குநராகத்தான் நுழைந்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு வெளியான பீட்சா 2 வில்லா என்ற படத்தில் இயக்குநர் தீபன் சக்கரவர்த்தியின் வசன இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஒரு சிறிய ரோலிலும் அவர் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து இவருக்கு ஓரளவு முக அறிமுகம் கொடுத்த படம் இந்தியா பாகிஸ்தான் (India Pakistan). கடந்த 2015ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் என் ஆனந்த் இயக்க, விஜய் ஆண்டனி முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை முக்கிய ரோலில் நடித்திருந்தார். மேலும் இந்த படங்களை அடுத்ததாக இவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்த படம் ஜெய் பீம் (Jai Bhim).

இந்த படத்தில் இருளர் பழங்குடியினர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சூர்யா முன்னணி நாயகனாக நடித்திருந்தாலும், இவரின் கதாபாத்திரமும் பெரும்பாலும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹீரோவாக குட் நைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார், அதில் நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்தின் வெற்றியை அவருடன் பகிர்ந்ததை பற்றிப் பேசியுள்ளார்.

நடிகர் மணிகண்டன் , சூர்யாவைப் பற்றிப் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் நடிகர் கே மணிகண்டன், சூர்யா சார் இப்படி பண்ணுவாருனு நான் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு ஜெய் பீம் படத்தில் சிறந்த கதாநாயகனுக்கான விருது கிடைத்தது. அது கிடைத்தவுடன் அவர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.பின் அவர் அங்கிருந்து கீழே இறங்கத் தயாராக இருந்தார். அப்போதுதான் என்னை மேடையில் அழைத்தார். இந்த சிறந்த விருதுக்குரியவன் நான் மட்டுமில்லை மணிகண்டனுக்கு பங்கு இருக்கிறது என்று என்னை மேடைக்கு அழைத்தார். அந்த சிறந்த நடிகருக்கான விருதை என்னுடனும் சூர்யா சார் பகிர்ந்துகொண்டார். நான் அதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று நடிகர் கே. மணிகண்டன் தெரிவித்திருந்தார். இந்த விஷயத்தை நடிகர் மணிகண்டன் குடும்பஸ்தன் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் மனதில் சூர்யாவின் வெற்றி :

நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ படத்திற்கு முன் வெளியான பல திரைப்படங்கள் பெரும் தோல்வியை சந்தித்திருந்தது. அந்த படங்களையெல்லாம் கடந்து இந்த ரெட்ரோ படமானது பெரும் கம்பேக் படமாக அமைந்துள்ளது என்றே கூறலாம். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தைத் தொடர்ந்து 3 படங்களைத் தனது கைவசம் வைத்துள்ளார் சூர்யா. ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா 45, வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா 46 மற்றும் வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் என 3 படங்கள் வரிசைகட்டி நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? - முழு விவரம் இதோ!
ஆதாரில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? - முழு விவரம் இதோ!...
சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது - விக்ரம் மிஸ்ரி
சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது - விக்ரம் மிஸ்ரி...
நான் கனவுல கூட நினைக்கல .. சூர்யா பற்றி மணிகண்டன் நெகிழ்ச்சி!
நான் கனவுல கூட நினைக்கல .. சூர்யா பற்றி மணிகண்டன் நெகிழ்ச்சி!...
சிலையென நினைத்து நிஜ முதலையிடம் சிக்கிய இளைஞன்!
சிலையென நினைத்து நிஜ முதலையிடம் சிக்கிய இளைஞன்!...
சம்பளத்தை வச்சிகோங்க.. தேசியப் பாதுகாப்பு நிதி வழங்கிய இளையராஜா!
சம்பளத்தை வச்சிகோங்க.. தேசியப் பாதுகாப்பு நிதி வழங்கிய இளையராஜா!...
'இந்தியன் 2' படம்.. மாறிய பிளான்.. எஸ்.ஜே சூர்யா வருத்தம்!
'இந்தியன் 2' படம்.. மாறிய பிளான்.. எஸ்.ஜே சூர்யா வருத்தம்!...
ஸ்ரீநகரில் வெடிசத்தங்கள்! ஜம்மு காஷ்மீர் முதல்வர் கண்டனம்..!
ஸ்ரீநகரில் வெடிசத்தங்கள்! ஜம்மு காஷ்மீர் முதல்வர் கண்டனம்..!...
இந்தியாவிற்கு ஆதரவு.. ஆமிர் கான், சைஃபை கொண்டாடும் இந்தியர்கள்..!
இந்தியாவிற்கு ஆதரவு.. ஆமிர் கான், சைஃபை கொண்டாடும் இந்தியர்கள்..!...
போர் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான்!
போர் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான்!...
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வரவேற்கும் தலைவர்கள்!
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வரவேற்கும் தலைவர்கள்!...
கோடையில் தயிர் ஏன் விரைவாக கெட்டுப்போகிறது? தடுப்பது எப்படி..?
கோடையில் தயிர் ஏன் விரைவாக கெட்டுப்போகிறது? தடுப்பது எப்படி..?...