பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்!
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவு காரணமாக காலாமானர். இவர், பாலிவுட்டில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியவர் ஆவார். இரண்டு வாரங்களுக்கு முன்னதாக திடீரென அவருக்கு சுவாசக் கோளாறு காரணமாக மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) உடல்நலக்குறைவு காரணமாக காலாமானர். இவர், பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியவர் ஆவார். கடந்த 1960ம் ஆண்டில் இருந்து தர்மேந்திரா திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திடீரென அவருக்கு சுவாசக் கோளாறு காரணமாக மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், மும்பையின் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து, நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நிலை தேறியதால் கடந்த நவ.11ம் தேதி மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் தகவல் வெளியானது.
Also Read… ரவி மோகனின் படத்திற்கு ப்ரோ கோட் பெயரை பயன்படுத்த விதித்த தடை நீட்டிப்பு!




ஏற்கெனவே வெளியான இறப்பு செய்தி:
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சமயத்திலேயே தர்மேந்திரா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாதக் செய்தி வெளியாகி பரபரப்பானது. ஆனால், அவரது குடும்பத்தினர் இந்த தகவலை முற்றிலும் மறுத்திருந்தனர். நடிகர் தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல், “ஊடகங்கள் அதி வேகத்தில் தவறான செய்திகளைப் பரப்புவது போல் தெரிகிறது. என் தந்தையின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் குணமடைந்து வருகிறார்” என்று கூறியிருந்தார்.
உடல்நிலை குறித்து முன்னுக்கு பின் முரண்:
அதேசமயம், தர்மேந்திரா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் பரவின. இவ்வாறு நீண்ட காலமாக அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் முன்னுக்கு பின் முரணாக வந்த வண்ணம் இருந்தன. எனினும், அவர் மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்து வந்ததாகவே தெரிகிறது.
தொடர்ந்து, சிகிச்சையில் இருந்த அவரை ஷாருக்கான், ஆர்யன் கான், சல்மான் கான், அவரது மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல் மற்றும் ஈஷா தியோல் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்ததாக கூறப்பட்டது.
Also Read… பைசன் முதல் டீசல் வரை… இந்த வீக்கெண்ட் ஓடிடியில் என்ன பார்க்கப் போறீங்க?
இந்நிலையில், இன்று காலை தர்மேந்திராவின் வீட்டு வாசல் முன்பு ஆம்புலன்ஸ் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைப்பார்த்த அவரது ரசிகர்கள் சந்தேகமடைந்துள்ளனர். தொடர்ந்து, நீண்ட நேரத்திற்கு பின்பே அவர் மரணமடைந்தது வெளியில் தெரியவந்தது.
தர்மேந்திரா கடந்து வந்த பாதை:
பஞ்சாபின் லூதியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த தர்மேந்திரா, 1954-ம் ஆண்டு தனது 19 வயதில் பிரகாஷ் கவுர் என்பவரை மணந்தார். அதன் பிறகுதான் திரைப்படத் துறையில் நுழைந்தார். அதன் பிறகுதான் நடிகை ஹேமா மாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தொடர்ச்சியான வெற்றி மற்றும் வணிக ரீதியான படங்களை கொடுத்ததால் அவர் பாலிவுட்டின் ஹீ மேன் என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படக்களில் நடித்தவர் என்ற பெருமைக்கு தர்மேந்திரா தான் சொந்தக்காரர் என்பது குறிப்பிடக்க விஷயமாகும்.
60 ஆண்டுகளை கடந்த திரைப்பயணம்:
இந்தி மட்டுமல்லாது வங்கமொழி, பஞ்சாபி திரைப்படங்களிலும் தர்மேந்திரா நடித்துள்ளார். அவரின் திரையுலக பங்களிப்பை பாராட்டி 2013ம் ஆண்டு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. தொடர்ந்து, சினிமாவில் அறிமுகமாகி 60 ஆண்டுகளை கடந்தும் தனது நடிப்பு பயணத்தில் அசத்தி வந்தார். அதோடு, வயதான நிலையிலும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வந்த தர்மேந்திரா, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, இயற்கை வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வந்தார். அந்தவகையில், அவர் இறுதியாக நடித்தப்படம் ‘இக்கிஸ்’ ஆகும். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் (டிசம்பர் 25ல்) வெளியாக உள்ளது.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை நடிகர் தர்மேந்திரா மரணமடைந்துள்ளார். அவரது மறைவிற்கு இந்திய திரையுல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என ஏராளாமானோர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.