ஆர்யாவின் பிறந்த நாளில் பூஜையுடன் தொடங்கியது 40-வது படம்!
Actor Arya's 40th Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இந்த நிலையில் ஆர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது 40வது படத்தின் படப்பிடிப்பும் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

ஆர்யா 40 படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. சாக்லேட் பாய், ரக்கட் பாய் என எந்த கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார் நடிகர் ஆர்யா. நடிகர் ஆர்யா 2005-ம் ஆண்டு தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி இருந்த நிலையில் தற்போது 20 வருடங்களாக நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம். இந்தப் படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி உள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து கேமியோ ரோலில் நடிகர் ஆர்ய நடித்த சிலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஆர்யா நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் உருவாகி வருகின்றது.
இதில் இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்ய நடிப்பில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தனது படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் ஆர்ய இன்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்த நாளிற்கு பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பூஜையுடன் தொடங்கியது ஆரியாவின் 40-வது படம்:
இந்த நிலையில் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் உருவாக உள்ள 40-வது படத்தின் பூஜை இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு தொடங்கியது. இந்தப் பூஜையில் நடிகர் ஆர்யாவின் மனைவி நடிகை சாயிஷா உட்பட படக்குழுவினர் பலர் பங்கேற்றுள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் நிகில் முரளி எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். முன்னதாக நடிகர் ஆர்யாவின் ரொமாண்டிக் படமான ராஜா ராணி படத்தைத் தொடர்ந்து தற்போது அவரது நடிப்பில் ஒரு ரொமாண்டிக் படத்திற்கு இசையமைப்பதாக ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
சூர்யா 40 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவு:
Love takes its first step. #Arya40 on floors soon! ♥️✨@arya_offl @sayyeshaa @tkishore555 @gvprakash @NikhilMuraly @JeevaSankar @onlyartmohan @jyothishnairm @halithashameem @binunepolean @naushadahmed_97 @BrindhaGopal1 @silvastunt @RIAZtheboss @ParasRiazAhmed1 @popcornoffl22 pic.twitter.com/fXksIGGvlG
— V4U Media (@V4umedia_) December 11, 2025