மழைக்கு கோரிக்கை வைத்த நடிகர் ஆர்யா… வைரலாகும் போஸ்ட்!
Actor Arya: தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய், ஆக்ஷன் பாய் என அனைத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் ஆர்யா. தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகர் ஆர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. சினிமாவில் அறிமுகம் ஆன போதே இரண்டாம் நடிகராக நடித்து இருந்தாலும் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்க தவறவில்லை. தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய், காமெடி நாயகன், ஆக்ஷன் ஹீரோ, லவ்வர் பாய் என எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளுத்து வாங்குவார். அப்படி நடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் வேட்டுவம்.
இயக்குநர் பா. ரஞ்சித் எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா உடன் இணைந்து தினேஷ், அசோக் செல்வன் மற்றும் ஷோபிதா துலிபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் நடிகர் தினேஷின் பிறந்த நாளை முன்னிட்டு வேட்டுவம் படக்குழு வெளியிட்ட வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மிரண்டுவிட்டனர் என்றே கூறலாம். அந்த அளவிற்கு மாஸாக இருந்தது. இந்தப் படம் தொடர்பாக படக்குழுவினர் தொடர்ந்து பேட்டிகளில் பேசி வரும் விசயங்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
வேட்டுவம் படம் குறித்து ஆர்யா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:
அதன்படி இந்தப் படம் ஒரு பியூட்டரிஸ்டிக் சயின்ஸ் பிக்ஷன் ட்ராமாவாக வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர் ஆர்யா அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதில், மழையே மழையே சற்று தள்ளி இரு. வேட்டுவம் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதனை நிறுத்த முடியாது என்று காமெடியாக பதிவை வெளியிட்டுள்ளார்.
Also Read… 13 ஆண்டுகளை நிறைவு செய்தது தளபதி விஜயின் துப்பாக்கி படம்
நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Rain Rain pls stay away .. can’t hold this forever .. #Vettuvam Climax continues 🔥🔥🔥🔥@beemji pic.twitter.com/KXPPFQ1G6y
— Arya (@arya_offl) November 13, 2025
Also Read… ரஜினி படத்தில் இருந்து விலகிய சுந்தர் சி – அடுத்த இயக்குநர் இவரா?