ஆரி அர்ஜுனனின் ஃபோர்த் ஃப்ளோர் படத்திற்கு சென்சார் என்ன தெரியுமா?
Fourth Floor Movie Censor Update: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகர் ஆரி அர்ஜுனன். இவர் தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து பிரபலமானதைவிட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றிப்பெற்றபோது தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்த் ஃப்ளோர்
தமிழ் சினிமாவில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் நடிகராக வலம் வருகிறார் ஆரி அர்ஜுனன். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த நடிகர் ஆரி அர்ஜுனன் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ரெட்ட சுழி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து நடிகர் ஆரி அர்ஜுனன் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் நடிகர் ஆரி அர்ஜுனன் நடிப்பில் வெளியான மாலை பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, நெஞ்சுக்கு நீதி என பலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்ததைவிட அவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவரும் வேறு ஒரு பக்கமும் ஆரி ஒரு பக்கமும் இருந்தார். இதன் காரணமாகவே இவர் தமிழக மக்களிடையே வரவேற்பைப் பெற்று அந்த சீசனில் டைட்டிலையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து படங்கள் மற்றும் இணையதள தொடர்களில் நடிகர் ஆரி நடித்து வருகிறார். அதன்படி நடிகர் ஆரி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஃபோர்த் ஃப்ளோர்.
ஃபோர்த் ஃப்ளோர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் போர்ட்:
சைக்காலஜி த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் தீப்ஷிகா, பவித்ரா, பேபி ஸ்ரீவர்ஷினி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தரண்குமார் இசையமைத்துள்ளார். படம் வருகின்ற 27-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு சென்சார் போர்ட் தற்போது சான்றிதழ் வழங்கியுள்ளது. அதன்படி படத்திற்கு சென்சார் போர்ட் யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.
Also Read… D55: தனுஷின் ‘டி55’ படத்தில் கதாநாயகியாக களமிறங்கும் ஸ்ரீலீலா!
நடிகர் ஆரி அர்ஜுனன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#FourthFloor Censored – U/A Certificate ✅
February 27 Release in Cinemas 🎥
A @lrsundarapandi1 Directorial
A @dharankumar_c Musical
Lyrics – @kukarthik1✍️#ManoCreations @DirectorS_shiva @deepshikhaoffi @adithya_Kathir @suriyasree1
@asulthanrajapro pic.twitter.com/dnLDYlsSJF— Aari Arujunan (@Aariarujunan) January 31, 2026
Also Read… ரசிகர்களிடையே வைரலாகும் பிரபு தேவா – வடிவேலு நடிக்கும் பேங் பேங் படத்தின் டைட்டில் டீசர்