கூலி இல்லை… சூப்பர் ஹீரோ படத்திற்காக கூட்டணி அமைக்கும் லோகேஷ் – அமீர் கான்!

Director Lokesh Kanagaraj: பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது கோலிவுட் சினிமாவில் வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் அளித்தப் பேட்டியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து படம் செய்ய உள்ளதை உறுதிப் படுத்தியுள்ளார்.

கூலி இல்லை... சூப்பர் ஹீரோ படத்திற்காக கூட்டணி அமைக்கும் லோகேஷ் - அமீர் கான்!

அமீர் கான்

Published: 

05 Jun 2025 16:36 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து இந்தப் படத்தில் உபேந்திரா ராவ், நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் ஷாகிர், ஸ்ருதி ஹாசன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கூலி படத்தில் கேமியோ ரோலில் அமீர் கான்?

கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானை நேரில் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதன் காரணமாக ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடிகர் அமீர் கான் கேமியோ ரோலில் நடிப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவியது.

ஆனால் இது குறித்து எனத விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் கூலி படத்தில் நடிகர் அமீர் கான் தற்போது புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன் மூலம் இவர் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவில்லை என்பது தற்போது உறுதியாகி உள்ளது.

இணையத்தில் வைரலகும் எக்ஸ் தள பதிவு:

லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணியை உறுதி செய்த அமீர் கான்:

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து படம் பன்ன உள்ளதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் அது சூப்பர் ஹீரோ கதையை மையமாக கொண்டு உருவாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அமீர் கான் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படம் அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.