Coolie : ரஜினிகாந்த்துடன் ஆக்ஷன் காட்சியில் அமீர்கான்.. கூலி திரைப்படத்தில் அமீர்கானின் காட்சிகள் எத்தனை நிமிடம் தெரியுமா?
Aamir Khan Cameo Role In Coolie : பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாகக் கலக்கி வருபவர் அமீர்கான். இவரின் முன்னணி நடிப்பில் பல ஹிட் படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் நடிகர் ரஜினிகாந்த்துடன் கூலி திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கும் நிலையில், அப்படத்தில் அதிரடி ஆக்ஷ்ன் காட்சியில், ரஜினியுடன் நடித்துள்ளாராம். எத்தனை நிமிடங்கள் படத்தில் நடித்திருக்கிறார் என்பதை பற்றி பார்க்கலாம்.

ரஜினிகாந்த், அமீர்கான் மற்றும் லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் இறுதியாக வேட்டையன் (Vettaiyan) படமானது வெளியாகியிருந்த நிலையில், அப்படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 171வது திரைப்படமாக அறிவிக்கப்பட்ட படம் கூலி. இந்த படத்தைத் தமிழ் சினிமாவின் ஹிட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகளுடன் இந்த கூலி படமானது பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் அறிவிப்புக்குக் கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து உருவாகி வந்தது. இந்த படத்தில் பான் இந்திய மொழி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan), நாகார்ஜுனா (Nagarajuna), அமீர்கான் (Aamir Khan), ஷோபின் ஷாஹிர் மற்றும் உபேந்திர ராவ் என பான் இந்திய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதில் இப்படத்தில் நடிகர் அமீர்கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இது குறித்து இந்தி நேர்காணல் ஒன்றிலும் அவர் பேசியிருந்தார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் ஆக்ஷ்ன் காட்சிகளில் நடித்துள்ளாராம். இந்நிலையில், இப்படத்தில் அவர் எத்தனை நிமிடங்கள் நடித்துள்ளார் தெரியுமா?. ரஜினிகாந்த்தின் இந்த கூலி படத்தில் கடைசி 15 நிமிடத்தில், ரஜினியுடன் ஆக்ஷ்ன் காட்சிகளில் நடித்திருக்கிறாராம். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கூலி படத்தில் முதல் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
5M+ realtime views paathuko, coolie varraan sollikko 😎 #Chikitu Music Video is going unstoppable 📣 #GetChikitufied 🕺🏻
🎵 https://t.co/MELbeDUgqm#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #TRajendar… pic.twitter.com/CBSBk77rgY
— Sun Pictures (@sunpictures) June 26, 2025
தமிழ் சினிமாவில் நுழைந்த அமீர்கான் :
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் அமீர்கான் கூலி படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் முன்னணி நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு எதிரான ரோலில் அமீர்கானை நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் அமீர்கான் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் 2 படங்களில் நடிக்கவுள்ளாராம்.
இந்த படத்தின் தொடர்பாகச் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட நடிகர் அமீர்கான் கூறியிருந்தார். இப்படமானது இந்தி மற்றும் தமிழ் மொழியில் உருவாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் சூர்யாவுடன் லோகேஷ் இயக்குவதாகக் கூறியிருந்த இரும்புக்கை மாயாவி படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூலி படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு :
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் இந்த கூலி படமானது உருவாகியிருக்கும் நிலையில், இப்படத்திற்கு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, இந்தி , கன்னடம் அமரரும் மலையாளம் என பான் இந்திய மொழிகளில் உருவ ஆகியிருக்கிறது.
அனிருத்தின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமையாகத் தயாராகியிருக்கிறது என்றே கூறலாம். இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகிறது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.