நேரில் சந்தித்த இயக்குநர் சிஎஸ்அமுதன் – நடிகர் சிவா… வைரலாகும் புகைப்படம்
Tamizh Padam Movie Part 3 Update Viral On Social Media: தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை கிண்டலடிக்கும் விதமாக உருவாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் தமிழ் படம். இந்தப் படங்களின் இரண்டு பாங்கள் முன்னதாக வெளியான நிலையில் தற்போது மூன்றாவது பாகம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

இயக்குநர் சிஎஸ் அமுதன் மற்றும் நடிகர் சிவா
தமிழ் சினிமாவில் இயக்குநர், படலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் இயக்குநர் சி.எஸ். அமுதன். கடந்த 2010-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தமிழ் படம். இந்தப் படம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடிய மாஸான காட்சிகளை காமெடியாக ரீ கிரியேட் செய்து கிண்டலடித்து இருந்ததே ஆகும். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன இயக்குநர் சி.எஸ்.அமுதன் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். இந்தப் படத்தில் நடிகர் சிவா நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் திஷா பாண்டே,
எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வெண்ணிற அடை மூர்த்தி, வி.எஸ். ராகவன், டெல்லி கணேஷ், பெரியார் தாசன், சண்முகசுந்தரம், பரவை முனியம்மா, அழகு, பொன்னம்பலம், மகாநதி சங்கர், சதீஷ், ஹல்வா வாசு, சீனு, மீசை ராஜேந்திரன், அம்மு ராமச்சந்திரன், கோவை செந்தில், நெல்லை சிவா, பெஞ்சமின், பாய்ஸ் ராஜன், அய்யப்பன், ரேகா சுரேஷ், பெரிய கருப்பு தேவர், திடீர் கண்ணையா. தேனி குஞ்சரம்மாள், ஸ்ரீ ராம், கஸ்தூரி என பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இவர்களின் கூட்டணியில் தமிழ் படம் 2 திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து படங்களில் மட்டும் இன்றி தமிழக அரசியல் மற்றும் மக்களிடையே நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை ரீ கிரியேட் செய்து இருந்தனர். இந்தப் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் படம் பாகம் 3 உருவாகிறதா? உற்சாகத்தில் ரசிகர்கள்:
இந்த நிலையில் இயக்குநர் சிஎஸ் அமுதன் இந்தப் படங்களை தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து ரத்தம் என்ற படத்தை இயக்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் இயக்குநர் சிஎஸ் அமுதன் மற்றும் நடிகர் சிவா இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படத்தை இயக்குநர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமிழ் படம் பாகம் 3 உருவாகிறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பட செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
இயக்குநர் சி.எஸ்.அமுதன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Ethechaya inga vanthen fraands… pic.twitter.com/IiCWx82vX3
— CS Amudhan (@csamudhan) March 9, 2026
Also Read… பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இயக்குநர் சிதம்பரத்திற்கு முன் ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!