2025 ஜூலை மாதம் தமிழ் சினிமாவில் நிகழும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பல படங்களின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைப்பெற்றே வருகின்றது. இந்த நிலையில் இந்த ஜூலை மாதம் 2025-ம் ஆண்டில் சினிமாவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2025 ஜூலை மாதம் தமிழ் சினிமாவில் நிகழும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

படங்கள்

Published: 

01 Jul 2025 18:20 PM

கூலி: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றது. சமீபத்தில் இந்த கூலி படத்தில் இருந்து சிக்கிடு வைப் என்ற சிங்கிள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டது. இதில் இசையமைப்பாளர் அனிருத் நடனம் ஆடியிருந்ததைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் இந்தப் பாடல் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஜூலை மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மதராஸி: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் அமரன். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மதராஸி. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார்.

மதராஸி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் வீடியோ அடுத்த வாரம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

கருப்பு: நடிகர் சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக உருவாகி வரும் படம் கருப்பு. இந்தப் படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் வருகின்ற ஜூலை 23-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் வெளியீட்டு தேதி அல்லது படத்தின் டீசர் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

கருப்பு படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இட்லி கடை: நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் குபேரா படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷின் பிறந்த நாள் வருகின்ற ஜூலை மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. அன்று இட்லி கடை படத்தில் இருந்து முக்கிய அப்டேட் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.