ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்த ஆண் குழந்தை.. வைரலாகும் போஸ்ட்!
Madampatti Rangaraj And Joy Crizildaa: தமிழ் சினிமா, சின்னதிரையிலும் பிரபலமான நபராக இருந்துவருபவர் மாதம்பட்டி ரங்கராஜன். இவர் காஸ்டியூம் டிசைனராக ஜாய் கிரிசில்டா சமீபத்தில் திருமணம் செய்திருந்தார். தற்போது இவர்களின் விவாகரத்து தொடர்பான செய்திகள் உலாவிவரும் நிலையில், பிரச்சனைகளுக்கு நடுவே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். இது தொடர்பான பதிவை ஜாய் கிரிசில்டா வெளியிட்டுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா
தமிழில் மெகந்தி சர்க்கஸ் (Meganthi circus) என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் (Chef Madhampatti Rangaraj). இவர் அதை தொடர்ந்து சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் தற்போது சின்னதிரை நிகழ்ச்சியில் நடுவராக இருந்துவருகிறார். இவர் முதலில் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இவரின் முதல் மனைவி ஸ்ருதி வழக்கறிஞர் ஆவார். 2வதாக இவர், பிரபல காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிசில்டா (Costume designer Joy crizildaa) என்பவரை காதலித்துவருவதாக முன்பே தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்ககளை ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜும் பகிர்ந்துகொண்டனர். மேலும் இவர் திருமணமான சில நாளிலே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இது மக்கள் மத்தியில் விவாத பொருளானாலும், பலரும் வாழ்த்தினர். மேலும் இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்வதற்கு முன்பே ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இதில் ஜாய் கிரிசில்டா கர்ப்பமான நிலையில், சில மாதங்களாக இவர்களுக்கிடையே கருத்துவேறுபாடுகள் இருந்துவந்துள்ளது. இந்நிலையில் இந்த விஷயமானது வழக்காக நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. மேலும் ஜாய் கிரிசில்டா நிறைமாத கர்ப்பிணியாக நீதிமன்றத்திற்கு, வந்து செல்வது தொடர்பான வீடியோவும் வெளியாகிவந்தது. இந்நிலையில் இவருக்கு இன்று 2025 அக்டோபர் 31ம் தேதியில் ஆண் குழந்தை (Baby boy) பிறந்துள்ளதாம். இது தொடர்பான அறிவிப்பை காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிசில்டா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி பிரியதர்ஷன்.. எந்த படத்தில் தெரியுமா?
குழந்தை பிறந்தது தொடர்பாக காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிரிசில்டா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :
இந்த பதிவில் ஜாய் கிரிசில்டா, “நாங்கள், மாதம்பட்டி ரங்கராஜும் மற்றும் நானும் ஒரு ஆண் குழந்தையை பெற்றுள்ளோம்” என அதில் அவர் அறிவித்துள்ளார்.
தொடரும் ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜனின் வழக்கு :
திருமணத்திற்கு பின் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா பகிரங்கமாக அளித்திருந்தார். இதை தொடர்ந்து இவர்களின் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், ஜாய் கிரிசில்டாவிற்கும் அவரின் குழந்தைக்காகவும் மாதம் ரூ 6.5 லட்சத்தை மாதம்பட்டி ரங்கராஜன் வழங்கவேண்டும் என ஜாய் கிரிசில்டா தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: அஜித் குமாரின் படத்தை இயக்கும் FIR பட இயக்குநர்? வைரலாகும் தகவல்!
மேலும் இவர்களின் வழக்கு நடைபெற்றுவரும் நிலையில், பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.