தேர்தல்களில் வாக்களிப்பது ஏன் அவசியம்.. வாக்களிப்பதன் முக்கியத்துவங்கள் என்ன என்ன?

What are The Important Aspects of Voting | இந்தியாவில் மக்கள் ஆட்சி நடைமுறையில் உள்ளது. அதாவது மக்களே தங்களுக்கான தலைவர்களை தேர்வு செய்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தேர்தல்களில் வாக்களிப்பதன் முக்கியத்துவங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேர்தல்களில் வாக்களிப்பது ஏன் அவசியம்.. வாக்களிப்பதன் முக்கியத்துவங்கள் என்ன என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

23 Mar 2026 19:23 PM

 IST

இந்தியாவில் மன்னர் ஆட்சி முறை முழுவதுமாக ஒழிக்கப்பட்டு, மக்களாட்சி முறை பயன்பாட்டில் உள்ளது. போராடி பெற்ற இந்த அதிகாரம் முழுவதுமாம பயன்படுத்தப்படுகிறதா என்றால் அது கேள்விக்குறியாகதான் உள்ளது. காரணம், இந்தியா கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம் என பல பிரிவுகளில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், இந்திய தேர்தல்கள் வெற்றியடையாத ஒன்றாகவே உள்ளது. காரணம், சுதந்திர இந்தியா இன்னும் ஒருமுறை கூட தனது 100 சதவீத வாக்குப்பதிவை பெற்றதில்லை. மக்களுக்காக நடத்தப்படும் தேர்தலில் மக்களே வாக்களிக்கானல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த நிலையில், வாக்களிப்பது ஏன் அவசியம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மக்களாட்சி முறையை பின்பற்றும் இந்தியா

மக்களால் மக்களுக்காக மக்களே தேர்தெடுத்து செய்யப்படும் ஆட்சி மக்கள் ஆட்சி (Democracy). இந்த மக்கள் ஆட்சி தான் தற்போது வரை இந்தியாவில் அமலில் உள்ளது. அதாவது, இந்தியர்கள் தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை அவர்களே தேர்வு செய்துக்கொள்ள வழங்கப்படும் மிக முக்கிய வாய்ப்பாக இந்த தேர்தல்கள் உள்ளன. தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும், தங்களை ஆளும் நபருக்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை பார்த்து, தேர்வு செய்ய வேண்டிய கடமையும் உள்ளது. ஆனால், பெரும்பாலான மக்கள் தங்களது முக்கிய ஜனநாயக கடமையான தேர்தலில் வாக்களிப்பதை புறக்கணித்து விடுகின்றனர். இவ்வாறு தேர்தலை புறக்கணிப்பது, வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயகத்தை வெகுவாக பாதிக்கும்.

இதையும் படிங்க : அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 இடங்கள்.. பாமகவிற்கு 18 இடங்கள்

வாக்களிப்பதின் முக்கியத்துவங்கள் என்ன?

  • வாக்களிப்பது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனும் அவர்களுக்காக செய்ய வேண்டிய முக்கிய கடமை ஆகும். நாட்டின் வளர்ச்சிக்காக அதன் குடிமக்களே வாக்களிக்கவில்லை என்றால், அதன் வளர்ச்சி கேள்விக்குறியானதாக மாறிவிடும்.
  • மக்களால்,மக்களுக்காக, மக்களே தலைவர்களை தேர்வு செய்யும் முறைதான் தேர்தல்கள். இந்த நிலையில், தேர்தல்களில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயகத்தின் மீது அக்கறை இல்லாமல் செயல்படுவதை உணர்த்தும்.
  • பொதுமக்கள் வாக்களிக்காமல் இருப்பதன் மூலம் அதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடக்கவிருக்கும் அனைத்தையும் அவர்கள் தீர்மானிக்க மறந்திவிடுகிறார்கள் என்று தான் அர்த்தமாகும்.
  • இன்றளவும் கூட சில நாடுகளில் மக்களுக்கு தங்களது தலைவர்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படாமல் உள்ளன. இத்தகைய சூழலில் இந்தியர்களுக்கான மிகப்பெரிய வரப்பிரசாதமாக தான் தேர்தல்கள் உள்ளன.

இதையும் படிங்க : 5 முறை தொடர் வெற்றியாளர் வி.ஜெயராமன் … 6-ஆவது முறை வெற்றிக்கு வித்திடுமா உடுமலைப்பேட்டை தொகுதி!

ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..