மக்களை ஏமாற்ற மாட்டேன்.. ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க.. அரசியலில் அதிரடி காட்டும் விஜய்!

TVK Leader Vijay Speech: தமிழக மக்களை பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஏமாற்ற மாட்டேன். நீங்கள் என்னை 100 சதவீதம் நம்பலாம். ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என்று தமிழக வெற்றிக் கழக முழு தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்வில் விஜய் தெரிவித்தார்.

மக்களை ஏமாற்ற மாட்டேன்.. ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க.. அரசியலில் அதிரடி காட்டும் விஜய்!

பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற மாட்டேன்

Published: 

16 Apr 2026 17:31 PM

 IST

தமிழக வெற்றி கழகத்தின் முழு தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை ( ஏப்ரல் 16) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது, தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை விவசாயி நாராயணனிடம் விஜய் வழங்கினார். 2- ஆவது பிரதியை ஆசிரியர் உமர் அபிபாவுக்கும், 3- ஆவது பிரதியை ஆட்டோ ஓட்டுனர் சூர்யா ஆகியோருக்கு விஜய் வழங்கினார். இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முழு தேர்தல் அறிக்கையில் உள்ள 10 முக்கிய வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார். பின்னர், அவர் பேசியதாவது: தமிழகத்தின் முதல் பெருமை தமிழ் மொழி. தமிழ் மொழியின் முதல் பெருமை திருக்குறள். அந்த திருக்குறள் கூறிய பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் என்பதுதான் தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை கோட்பாடாகும்.

திருக்குறள் அடிப்படையில் தவெக வாக்குறுதிகள் வெளியீடு

திருக்குறளின் அடிப்படையிலேயே, இந்த தேர்தலுக்கு தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இதனால், திருக்குறளும் நமக்கு ஒரு வழிகாட்டி என்றே கூறலாம். திருக்குறள் கூறிய அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகள் இருக்கும். நேர்மையே அடிப்படை சித்தாந்தமாக தமிழக வெற்றிக் கழகம் எடுத்துள்ளது. அதன் அடிப்படையிலேயே கட்சியின் முதல் தேர்தல் அறிக்கையை கூட நேர்மையான உத்தரவாதம் என்று கூறுகிறோம். ஸ்டாலின் சார் மாதிரி ஏமாற்ற மாட்டோம். மற்றும் பலர் மாதிரி அள்ளி விடுகிற அறிக்கையாக இருக்காது.

மேலும் படிக்க: “அரசியலில் நீங்கள் லாலிபாப் சாப்பிடும் பேபி”.. முதல்வர் ஸ்டாலின் முன்பு விஜய்யை கடுமையாக விமர்சித்த பிரேமலதா..

பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற மாட்டேன்

திமுக மற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஒன்றாகவே உள்ளது. இந்த இரு கட்சிகளும் ஒரே குடையின் கீழ் இருக்கும் கூட்டணி கட்சிகள் ஆகும். இந்த ஊழல் கூட்டம் போல தமிழக மக்களை தவெக ஏமாற்றாது. நமக்கு தமிழக மக்களின் நலனே முக்கியமாகும். இந்த விஜயை நீங்கள் 100 சதவீதம் நம்பலாம். பொய்யான வாக்குறுதிகள் அளித்து நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட தொட மாட்டேன். நமது வேட்பாளர்களும் நானும் ஒன்று தான். நமது வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது நமக்கே நாம் வாக்களித்துக் கொள்வது போன்றது.

எனது தொகுதிக்கு மாதந்தோறும் விசிட்

வேட்பாளர்களை வெற்றி பெற்றால், நாம் வெற்றி பெற்றது போல் ஆகும். எனவே, அனைவரும் விசில் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். மே 4- ஆம் தேதி புதிய ஒளி கிடைக்க வேண்டும். தவெக ஆட்சி அமைய வேண்டும். அனைவரும் தங்களது வீட்டு வாசல் முன் விசில் சின்னத்தை கோலமாக போட வேண்டும். நான் வெற்றி பெறும் தொகுதிக்கு மாதம்தோறும் கண்டிப்பாக வருவேன். அந்த தொகுதி மக்கள் என்னை எளிதாக சந்திக்கலாம். உங்கள் தேவைகள் அனைத்தும் கேட்காமலே நிறைவேறும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தமிழகமெங்கும் எதிர்ப்புத்தீ பரவட்டும்.. கருப்பு சட்டை அணிந்து, கருப்புக்கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்..

Follow Us
Related Stories
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி