திறந்திருக்கும் தவெகவின் கூட்டணி வாசல் கதவு..பிரம்மாண்ட ஆஃபருடன் காங்கிரஸுக்கு அழைப்பு?விஜயின் பலே பிளான்!

TVK Congress Allaince: தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்தால் அந்த கட்சிக்கு பல்வேறு அதிரடி ஆஃபர்களை தவெக தலைவர் விஜய் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது எந்த மாதிரியான ஆஃபர் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

திறந்திருக்கும் தவெகவின் கூட்டணி வாசல் கதவு..பிரம்மாண்ட ஆஃபருடன் காங்கிரஸுக்கு அழைப்பு?விஜயின் பலே பிளான்!

காங்கிரஸை தவெக கூட்டணிக்குள் இழுக்க திட்டம்

Updated On: 

05 Feb 2026 12:53 PM

 IST

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி சட்டமன்றத் தேர்தலுக்காக தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த கட்சியின் முதல் மாநாட்டில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்திருந்தார். ஆனால், தற்போது வரை தமிழக வெற்றி கழகத்தில் எந்த கட்சிகளும் கூட்டணிக்கு வந்த மாதிரி தெரியவில்லை. ஆனால், பிற கட்சிகளை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அந்த கட்சிக்கு தேர்தல் வழிகாட்டியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் விஜயை முதல்வராக ஏற்கும் கட்சிகளை கூட்டணியில் இணைக்க தயார் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் பிரயோகித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் இழுக்க திட்டம்

இதனால், தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணிக்கான வாசல் கதவு திறந்தே உள்ளது. இதில், தற்போது வரை எந்த கட்சிகளும் கூட்டணிக்கு வராத நிலையில், காங்கிரஸ் கட்சியை மட்டும் கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று விஜய் மிகவும் விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சிக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் தனிப்பட்ட முறையில் பிணைப்பு இருந்து வருகிறது. அண்மையில் கூட, விஜயின் தந்தை சந்திரசேகர் தமிழக வெற்றி கழகத்துடன், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தால் இழந்த அதிகாரத்தை திரும்ப பெறலாம் என்று கூறியிருந்தார்.

மேலும் படிக்க: தமிழகம்-புதுச்சேரியில் பிரதமர் மோடி 2 நாள்கள் விசிட்..பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்கிறார்…குஷியில் பாஜகவினர்!

காங்கிரஸுக்கு 70 தொகுதிகள்- துணை முதல்வர் பதவி

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை இணைக்கும் வகையில், அந்த கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை அள்ளிக் கொடுப்பதற்கு விஜய் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 70 சட்டமன்ற தொகுதிகள், துணை முதல்வர் பதவி, 6 அமைச்சர்கள் பதவி மற்றும் வருகிற 2029 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய மக்களவைத் தேர்தலில் 28 மக்களவை தொகுதிகளையும் வழங்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் எழும்பும் கூக்குரல்

தற்போது வரை திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி, திமுக தலைமையிடம் 41 சட்டமன்ற தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, 2 மாநிலங்களவை உறுப்பினர் இடம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளை காதில் வாங்கிக் கொள்ளாதது போலவும், குறைந்த தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், திமுக கூட்டணியை விட தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்தால் மிகப்பெரிய எதிர்காலம் அமையும் என்று அந்த கட்சியை சேர்ந்த சிலர் கூக்குரல் எழுப்பி வருகின்றனராம்.

மேலும் படிக்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்..பரபரக்கும் அரசியல் களம்!

Related Stories
தேர்தல் வாக்குறுதியில் தள்ளுபடி அறிவிப்பு? கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க குவியும் மக்கள்..தமிழக மக்களின் பக்கா பிளான்!
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்..பரபரக்கும் அரசியல் களம்!
ஜெயலலிதாவை ரோல் மாடல் என்கிறார்… அப்போ யார் ஊழல் சக்தி? விஜய்யிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி
ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்-கடன் ரத்து..அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதி..எடப்பாடி போட்ட லிஸ்ட்!
காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள்…திமுக மூத்த நிர்வாகிகள் போர்கொடி?மாறும் கூட்டணி கணக்கு!
மு.க.ஸ்டாலின் 2-ஆவது முறையாக முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது…அமைச்சர் பி.கே.சேகர்பாபு
‘ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பவரின் வாழ்க்கைக்கே மதிப்பு இல்லை’.. தொழிலதிபர் வேதனை!!
‘மார்கோ’ பட இயக்குநருடன் பெரும் பட்ஜெட் படத்தில் நடிக்க தயாராகும் பாலகிருஷ்ணா!
புகழ்பெற்ற தெலுங்கு இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி..
உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்