சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் புறப்பட்டார் விஜய்…தேர்தல் பரப்புரையை தொடங்க இருப்பதாக திட்டம்?

TVk Executive Meeting: தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சியின் தலைவர் விஜய் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டு சென்றார். அங்கு, அவர் கூட்டத்தில் பங்கேற்பதுடன், தேர்தல் பரப்புரையை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் புறப்பட்டார் விஜய்...தேர்தல் பரப்புரையை தொடங்க இருப்பதாக திட்டம்?

தவெக தலைவர் விஜய் சேலம் புறப்பட்டார்

Updated On: 

13 Feb 2026 11:06 AM

 IST

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை ( பிப்ரவரி 13) நடைபெறுகிறது. இந்த நிகழ்வில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்று பேச உள்ளார். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் தனது வீட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கார் மூலம் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கிருந்து, தனி விமான மூலம் சேலத்துக்கு விஜய் புறப்பட்டு சென்றார். சேலம் விமான நிலையத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவரை வரவேற்று விழா நடைபெறும் பகுதிக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள், தேர்தலின் போது தமிழக மக்களுக்கு கொடுக்கக்கூடிய வாக்குறுதிகள் உள்ளிட்டவை குறித்து விஜய் பேச இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தல் பரப்புரையை தொடங்கும் விஜய்

இதற்கு முன்பு விஜய்யின் மக்கள் சந்திப்பு இயக்கமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது சேலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரையை விஜய் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் இந்த கருத்தை தெரிவித்திருந்தார். சேலத்தில் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. பாமக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது.

மேலும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை.. “வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு”.. காலையிலேயே சர்ப்ரைஸ் தந்த முதல்வர் ஸ்டாலின்!!

சேலத்தில் விஜய் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம்

சேலத்தில் அதிமுக, திமுக, பாமக ஆகிய கட்சிகள் பலம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மற்றும் விஜயின் தேர்தல் பரப்புரை பயண தொடக்கம் ஆகியவை நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் சுமார் 5000 பேர் மட்டுமே பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் க்யூ ஆர் குறியீடு மூலம் சோதனை செய்த பின்னரே நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.\

கட்சியினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில்…

தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 1000 போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை பனையூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றிருந்தது. இந்த விழாவில், கட்சியினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் விஜய் பேசி இருந்தார். இதே போல, இந்த நிகழ்விலும் கட்சியின் தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து பேச இருப்பதாக புறப்படுகிறது.

மேலும் படிக்க: “மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000″ஆக உயர்த்தி வழங்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி!!

Related Stories
திறக்காத கூட்டணி கதவு.. செய்வதறியாது கையறு நிலையில் பன்னீர்செல்வம்.. எதிரே இருக்கும் ஒரே சான்ஸ்!
உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திருச்சி வருகை..2 நாள்கள் விசிட்…பாஜக போட்டியிடும் தொகுதிகள் தேர்வு?
புதுச்சேரி சட்டமன்ற கூட்டம்…ரூ.5,396 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்…முதல்வர் தாக்கல் செய்தார்!
கூட்டணி ஆட்சி கதவை அடைத்த ஸ்டாலின்…ரகசியம் வைத்துள்ள செல்வப்பெருந்தகை..காங்கிரஸுக்கு இருக்கும் 2 சாய்ஸ்!
தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என முடிவு செய்யும் தேர்தல் – மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக – காங்கிரஸ் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை கொடுத்த எம்.பி கனிமொழி.. என்ன சொன்னார் தெரியுமா?
அமெரிக்க வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
ஆபரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட விமான படைத்தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்
ஆவேசம் 2 படம் ரிலீஸ் எப்போது? நடிகர் ஃபஹத் ஃபாசில் கொடுத்த அப்டேட்
ஒரு சக்தி என் உடலுக்குள் நுழைந்தது.. நடிகை சுதா சந்திரன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்