சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை… தொல்.திருமாவளவன் திடீர் முடிவு.. பின் வாங்க என்ன காரணம்!

Vck Leader Thol.Thirumavalavan : தமிழக சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிடவில்லை என்றும், அந்த தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜோதிமணி இளையபெருமால் போட்டியிடுவார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார் .

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை... தொல்.திருமாவளவன் திடீர் முடிவு.. பின் வாங்க என்ன காரணம்!

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை

Updated On: 

04 Apr 2026 19:46 PM

 IST

சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதில், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவதாக தெரிவித்திருந்தேன். பாராளுமன்ற உறுப்பினராக 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். தமிழக சட்டமன்றத்தில் எம்எல்ஏவாக செல்ல வேண்டும் என்று நான் எண்ணினேன். கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதற்காக திட்டக்குடி தொகுதியை வாங்கி இருந்தேன். ஆனால், தற்போதைய காங்கிரஸ் தலைவராக இருக்கும் செல்வப் பெருந்தகை கேட்டதால் அந்த தொகுதியை அவருக்கு விட்டுக் கொடுத்தேன். பதவியில் எனக்கு பெரிய பிடிப்பு இல்லை என்பது இதுவும் ஒரு சான்றாகும். வலதுசாரிகளின் கைகள் ஓங்கி வருகின்றன.  அவர்கள் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்துவதற்காக காய்களை நகர்த்தி வருகின்றன.

2026 சட்டமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல

இதனால், 2026 சட்டமன்றத் தேர்தல் சாதாரண தேர்தலாக இருக்காது என்று நான் கூறியிருந்தேன். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டுமென்று வலியுறுத்தினால் திமுக கூட்டணியில் எந்தவித சலசலப்பும் எழுந்து விடக்கூடாது. அதன் மூலம் பலவீனம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற பொறுப்புணர்வின் மூலமாக அதை முன் வைக்கவில்லை. ஆனால், சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன் என்று கூறியவுடன் பதவி ஆசை காரணமாக எம்பி பதவியை விட்டுவிட்டு எம்எல்ஏ பதவிக்கு வருகிறார் எனவும், கூட்டணி ஆட்சிக்கு முயற்சிக்கிறார் என்றும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க: Ruby R. Manoharan Tamil Nadu Election: நாங்குநேரி தொகுதியை தக்க வைத்துக் கொள்வாரா ரூபி ஆர்.மனோகரன்!

தமிழகம் குறி வைக்கப்பட்ட மாநிலம்

இதே போல, துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார் எனவும், தொங்கு சட்ட பேரவை உருவாக போவதாக யூகிக்கிறார் எனவும், அதனால் அவர் சட்டமன்றத்தில் இருந்தால்தான் கூட்டணி ஆட்சி என்ற கருத்தை உயர்த்தி பிடிக்க முடியும் எனவும் ஆளாளுக்கு அவர்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஏற்கனவே விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 எம்எல்ஏக்களில் 3 பேருக்கு வாய்ப்பு அளிக்க மறுத்தது, அவர்கள் திமுக ஆதரவில் இருப்பதனால் தான் என்று வதந்தி பரப்புகின்றனர். எனது கட்சி நிர்வாகிகளிடம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் சூழல் மாறும். அப்போது, நான் சட்டமன்றத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மட்டுமே தெரிவித்திருந்தேன். தமிழகம் குறி வைக்கப்பட்ட மாநிலமாக மாறி உள்ளது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை

தமிழக சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிடவில்லை. அதற்கு பதிலாக சாதி ஒழிப்பில் தீவிரமாக பணியாற்றி இளையபெருமாளின் இளைய மகனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஜோதிமணி இளையபெருமாள் போட்டியிடுவார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: வேட்பு மனுவில் குளறுபடி… பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்!

Follow Us
மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கேரளாவில் பிரம்மாண்ட சிலை - ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு
உணவளித்தவரின் மரணத்துக்கு வந்து இரங்கல் தெரிவித்த குரங்கு - வைரல் வீடியோ
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் - பரபரப்பு தகவல்
ரூ.50,000க்காக ஏற்பட்ட தகராறு... வெளிச்சத்துக்கு வந்த மிகப்பெரிய கிட்னி கடத்தல் கும்பல் நெட்வொர்க்