செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டர்.. கன்னத்தில் அறைந்த விசிக தலைவர் திருமாவளவன்.. அதிர்ச்சி சம்பவம்!

VCK Leader Thirumavalavan Slapped Party Member | தேனி மாவட்டத்தில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டர் ஒருவரை அவர் கன்னத்தில் அறைந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டர்.. கன்னத்தில் அறைந்த விசிக தலைவர் திருமாவளவன்.. அதிர்ச்சி சம்பவம்!

பிரசாரத்தின் போது தொண்டரை அறைந்த திருமாவளவன்

Published: 

09 Apr 2026 08:59 AM

 IST

தேனி, ஏப்ரல் 09 : தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று , 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தொண்டர் ஒருவரை கண்ணத்தில் அறைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை விசிக சந்திக்கும் நிலையில், மொத்தம் 8 தொகுதிகள் அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தனி தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக விசிக வேட்பாளர் கதிர்வேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : Puducherry Elections 2026 : புதுச்சேரியில் இன்று ஆட்சி அதிகாரத்துக்கான தேர்தல் போர்… கோட்டையில் கொடி நாட்டப்போவது யார்!

பெரிய குளத்தில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க திருமாவளவன் தேனிக்கு சென்றார். அங்கு முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வத்துடன் இணைந்து அவர் பானை சின்னத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க கோரி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கட்சி தொண்டரை கண்ணத்தில் அறைந்த திருமாவளவன்

தேனிக்கு பிரசாரத்திற்கு வந்த திருமாவளவனை காண தேனி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விசிக தொண்டர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வந்துள்ளனர். அவர்கள், திருமாவளவன் பேசும்போது ஆரவாரம் செய்துள்ளனர். அப்போது கூட்டத்தில் இருந்த விசிக தொண்டர் ஒருவர் பிரசார வாகனத்தின் மீது ஏறி திருமாவளவன் உடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

இதையும் படிங்க : Chengalpattu Constituency Election 2026: திமுக அதிமுக இடையே நிலவும் கடுமையான போட்டி.. செங்கல்பட்டு தொகுதியில் வெற்றி யாருக்கு?

ஆரம்பம் முதலே தொண்டர்களை முறையாக நடந்துக்கொள்ளும்படி கூறி வந்த திருமா, செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனை கண்டு அங்கிருந்த அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பின்னர், அங்கிருந்தவர்கள் அந்த தொண்டரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
Related Stories
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?