வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு.. தேர்தல் களத்தில் உச்சக்கட்ட பரபரப்பு.. கலசப்பாக்கத்தில் அதிர்ச்சி..

Tamilnadu Assembly Election: வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டதால் அந்த மையத்தில் வாக்குப்பதிவு தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. இதனால் கீழ்பாலூர் பகுதியில் தற்போது வரை ஒருவித பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு.. தேர்தல் களத்தில் உச்சக்கட்ட பரபரப்பு.. கலசப்பாக்கத்தில் அதிர்ச்சி..

வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த 4 பேர் கைது

Published: 

23 Apr 2026 13:04 PM

 IST

Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ்பாலூர் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி எண் 193-ல், இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சுயேச்சை வேட்பாளரின் முகவர்கள் எனக் கூறிக்கொண்டு உள்ளே நுழைந்த சிலர் திடீரென ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் தேர்தல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டுக் கருவியை தூக்கிப் போட்டு உடைத்தனர்.

இதையும் படிக்க: சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ‘டீனா’ ரோபோ.. 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் புதுமை!!

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைவு:

இயந்திரம் உடைக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடைந்த இயந்திரத்தைப் பார்வையிட்ட அதிகாரிகள், மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கீழ்பாலூர் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரகளையில் ஈடுபட்ட போலி முகவர்கள்:

வாக்குச்சாவடியைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் உரிய சோதனைக்குப் பிறகே வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ரகளையில் ஈடுபட்ட போலி முகவர்களை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதற்றமான சூழல்:

வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டதால் அந்த மையத்தில் வாக்குப்பதிவு தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. இதனால் கீழ்பாலூர் பகுதியில் தற்போது வரை ஒருவித பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகத் திருவிழாவின் ஒரு பகுதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வேளையில், இயந்திரம் உடைக்கப்பட்ட இந்தச் சம்பவம் கலசப்பாக்கம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Tamil Nadu Election 2026 LIVE: தமிழ்நாட்டின் தேர்தல் திருவிழா.. வாக்குப்பதிவு விறுவிறுப்பு

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..