“காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்”.. பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை..

Tamilnadu Assembly Election: பாஜக, அதிமுக முகமூடி அணிந்து தமிழ்நாட்டிற்குள் நுழைய இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். இந்த ஜனநாயகமுறை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் பாஜக, அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றும், இந்த தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றி பெறுவோம் எனவும் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்.. பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை..

செல்வப்பெருந்தகை

Updated On: 

04 Apr 2026 07:14 AM

 IST

Tamilnadu Polls 2026: தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுகவிடம் பல்வேறு இழுபறிக்கு பின்பு முதல் ஆளாக 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ், வேட்பாளர் பட்டியலை வெளியிடாமலேயே காலம் தாழ்த்தி வந்தது. எந்த தொகுதிகள் என முடிவான பின்னும், அந்த தொகுதிகளில் யாரை வேட்பாளர்களை நிறுத்துவது என கட்சிக்குள்ளேயே குழப்பம் நீடித்து வந்தது.

இதையும் படிக்க: வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்.. 12 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு..

வேட்புமனுத் தாக்கலுக்கு 2 நாட்களே அவகாசம்:

இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்றைய தினம் (ஏப்.3) வெளியானது. இதில், ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இன்றும், தங்கட்கிழமையும் என 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மாங்காட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை செல்வப்பெருந்தகை சந்தித்தார்.

நூற்றுக்கு நூறு வெற்றி பெறுவோம்:

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பாஜக, அதிமுக முகமூடி அணிந்து தமிழ்நாட்டிற்குள் நுழைய இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். இந்த ஜனநாயகமுறை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் பாஜக, அதிமுகவை தோற்கடிக்க வேண்டும், தேர்தல் முடிவு வந்த பிறகு என்னுடைய முழுமையான பணி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு மட்டும் தான். 2 ஆண்டுகள் தமிழக மக்களுக்கு பணி செய்தது போல், நாடாளுமன்ற தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றது போல், இந்த தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றி பெறுவோம் என்றார்.

இதையும் படிக்க: வெற்றி ஒன்றே இலக்கு, ஓய்வின்றி உழைக்கும் கழக செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள் – முதல்வர் ஸ்டாலின்..

தலைவர் பதவியில் இருந்து விலகல்:

தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தியிடம் தெரிவித்து விட்டேன். தமிழ்நாடு மக்களின் பிள்ளையாக 2 ஆண்டுகள் இருந்தேன். தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டு பிள்ளையாக வேறு யாராவது வேலை செய்வார்கள். நான் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களின் பிள்ளையாக இருந்து பணி செய்வேன். ஒவ்வொரு பதவியில் இருந்து ஒவ்வொருவர் விலகும் போதும் மன நிறைவோடு விலகுவார்கள். அதே போன்று நானும் மனநிறைவோடு பதவி விலக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us
ரயில் டிக்கெட் ரத்து செய்வதில் புதிய மாற்றம் - இனி முழு கட்டணமும் திரும்ப கிடைக்காது!
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்குவோம் - ஈரான் எச்சரிக்கையால் மீண்டும் பதற்றம்
துல்கர் சல்மானுடன் மோதலா? டோவினோ தாமஸ் அதிரடி பதில்!
மீண்டும் சரிந்த தங்கம் விலை.