AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெருங்கும் தேர்தல்.. சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக மையக்குழு கூட்டம்..

தமிழகத்தைப் பொறுத்தவரையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாஜகவிற்கு 27 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நெருங்கும் தேர்தல்.. சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக மையக்குழு கூட்டம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Apr 2026 07:34 AM IST

சென்னை, ஏப்ரல் 4, 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் களம் பரபரப்பாகி வருகிறது. இதில் முக்கியமாக, பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4ஆம் தேதி இன்று சென்னையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக, நேற்று புதுச்சேரியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை வந்த அவர், நேற்று இரவு சென்னையில் தங்கியிருந்த நிலையில், இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, லக்ஷ்மி ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தைப் பொறுத்தவரையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாஜகவிற்கு 27 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள சூழலில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்:

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தமிழக பாஜக மைய நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல், மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் அரவிந்த் மேனன், தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், வேல்முருகன், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, வானதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க: “காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்”.. பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை..

இந்த கூட்டத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த முறையை விட அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனைக்குப் பிறகு, கூட்டணி கட்சி தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி செங்கல்பட்டு, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us