நேரடி அரசியல் களத்தில் சபரீசன்.. டெல்லியே அடுத்த டார்கெட்?.. திமுகவின் புதிய வியூகம்..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் முதல்வர் ஸ்டாலின், துர்க்கா ஸ்டாலின், உதயநிதி மற்றும் சபரீசன் என நான்கு அதிகார மையங்கள் இருப்பதாகத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த விமர்சனங்களுக்குப் மத்தியில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நேற்றைய தினம் சபரீசன் தயக்கமின்றி பதிலளித்துள்ளார்.

நேரடி அரசியல் களத்தில் சபரீசன்.. டெல்லியே அடுத்த டார்கெட்?.. திமுகவின் புதிய வியூகம்..

வாக்கு சேகரித்த சபரீசன்

Updated On: 

03 Apr 2026 11:06 AM

 IST

Tamilnadu Polls 2026: தமிழக அரசியல் களத்தில் எப்போதும் விவாதப் பொருளாக இருக்கும் ‘குடும்ப அரசியல்’ விமர்சனங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் முதன்முறையாக நேரடி அரசியல் களத்தில் கால்பதித்துள்ளார். இது தமிழக அரசியலில், குறிப்பாக திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை திமுகவின் தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் பின்னணியில் இருந்து பணியாற்றி வந்தவர் சபரீசன். 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் தொகுதிப் பங்கீடு முதல் வியூகங்கள் வரை இவரது பங்களிப்பு முக்கியமாக இருந்தது. ஆனால், முதல்முறையாக தற்போது அவர் நேரடியாக மக்கள் மன்றத்திற்கு வந்துள்ளார்.

இதையும் படிக்க: “நாங்கள் சங்கி என்றால், பாஜகவோடு கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா?”.. முதல்வருக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!!

வில்லிவாக்கம் தேர்தல் பரப்புரை:

சென்னையில் தனது நெருங்கிய நண்பரும், வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளருமான கார்த்திக்கை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் நேற்றைய தினம் சபரீசன் பங்கேற்றார். அவரோடு, இந்த நிகழ்வில் அவரது மனைவி செந்தாமரை, அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோரும் உடனிருந்தனர். அப்போது கூட்டத்தில் பேசிய சபரீசன், கார்த்திக்கை வெற்றி பெறச்செய்யும்படி கேட்டுகொண்டார். வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனாவும், அதிமுக சார்பில் விஜயகுமாரும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

ஆதவ் அர்ஜுனாவை வீழ்த்த வியூகம்:

மேலும், ஆதவ் அர்ஜுனாவை வீழ்த்தவே சபரீசன் களத்தில் இறங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், ஆதவ் அர்ஜுனா திமுகவில் இருந்தபோது அவர் கார்த்திக் மோகன், சபரீசன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார். மூவரும் நல்ல நண்பர்களாக வலம் வந்தனர். இதனால் ஆதவ் அர்ஜுனாவை,  நண்பர் கார்த்திக் மோகனை வைத்து வீழ்த்த திமுக திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு பக்கப்பலமாகவே சபரீசன் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் விமர்சனமும் சபரீசனின் பதிலும்:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் முதல்வர் ஸ்டாலின், துர்க்கா ஸ்டாலின், உதயநிதி மற்றும் சபரீசன் என நான்கு அதிகார மையங்கள் இருப்பதாகத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த விமர்சனங்களுக்குப் மத்தியில், செய்தியாளர்களின் கேள்விகளுக்குத் தயக்கமின்றி பதிலளித்த சபரீசன், தமிழகம் முழுவதும் திமுகவின் வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது, 100% வெற்றி நிச்சயம் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். எங்களிடம் மக்களுக்கான திட்டங்கள் உள்ளன, எங்களுக்குப் போதிய தன்னம்பிக்கை உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

டெல்லி நோக்கிய நகர்வா?

அறிவாலய வட்டாரங்களில் பேசப்படும் தகவலின்படி, தமிழக அரசியலில் உதயநிதி ஸ்டாலினும், டெல்லி அரசியலில் (நாடாளுமன்றம்) சபரீசனும் திமுகவின் முகங்களாகச் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே சபரீசனை மாநிலங்களவை உறுப்பினராக்கி டெல்லிக்கு அனுப்பும் ஆலோசனைகளும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : தேர்தலுக்குப் பின் விஜய்யுடன் பாஜக கூட்டணி.. NDA ஆட்சி அமையும்.. ராம்தாஸ் அத்வாலே உறுதி!!

முரசொலி மாறன் போல சபரீசன்:

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முரசொலி மாறன் எப்படி ஒரு தூணாக இருந்தாரோ, அதேபோல் முதல்வர் ஸ்டாலினுக்குச் சபரீசன் பக்கபலமாக இருப்பதாக திமுகவின் மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர். சபரீசனின் இந்த நேரடி அரசியல் பிரவேசம் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு எந்த மாதிரியான மாற்றத்தைத் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow Us
Related Stories
மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி சீனிவாசன்.. வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்..
தமிழக சட்டமன்ற தேர்தல்… தேசிய கட்சிகள் 8 தொகுதியில் நேரடி போட்டி… மக்கள் ஆதரவு யாருக்கு!
முதல்வர் ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு.. உட்கட்சி பூசலை தீர்க்க நிர்வாகிகளுக்கு அதிரடி வாக்குறுதிகள்!!
பரபரக்கும் தேர்தல் களம்: பாஜக தலைமையிடம் இருந்து அண்ணாமலைக்கு பறந்த அழைப்பு… முழு விவரம் உள்ள!
கட்சி அறிவிக்கும் முன்பே வேட்புமனுத் தாக்கல்.. பாஜக நிர்வாகியை அதிரடியாக நீக்கிய நயினார் நாகேந்திரன்..
P. Geetha Jeevan Tamil Nadu Election: திமுகவில் ஒரே பெண் அமைச்சர்… தூத்துக்குடி தொகுதியை தக்க வைப்பாரா கீதா ஜீவன்!
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..