Tamil Nadu Election schedule : தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் .. வாரியாக முழு விவரம்
lection Commission Poll Schedule :தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை அறிவித்துள்ளது.

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார்
சென்னை, மார்ச் 15 : தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் 15, 2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் எனப்படும் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்றன. இந்த பணியின் போது இறந்தவர்கள் வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டன. மேலும் தவறுதலாக நீக்கப்பட்டவர்களின் பெயர்களை நீக்க உரிய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தன. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகின. இதனையடுத்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது?
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 5 மாநிலங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார். குறிப்பாக 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள், உள்ளூர் விடுமுறைகள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளப்பட்டன. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் 15, 2026 அன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை அவர் அறிவித்தார். அவர் அறிவித்துள்ளதன் படி தமிழகத்தில் மே 10, 2026 அன்றுடன் ஆட்சிகாலம் நிறைவடைகிறது. மேலும், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெறவிருக்கிறது.
மாநில வாரியாக தேர்தல் தேதி விவரம்
Election Commission of India announces dates for Assembly elections in 5 states/UTs.
1. Assam- Date of Polling- 9th April; Date of Counting 4th May
2. Tamil Nadu- Date of Polling- 23rd April; Date of Counting- 4th May
3. West Bengal- Date of Polling- 23rd April (1st phase),… pic.twitter.com/wiM3u6FhIc
— ANI (@ANI) March 15, 2026
தேதி வாரியாக விவரம்
தேர்தல் தேதி
இதையும் படிக்க : K. Ponmudi Tamil Nadu Election: விழுப்புரத்தில் தொடர் வெற்றியில் திளைத்த க.பொன்முடி… மீண்டும் களமிறக்கப்படுவாரா!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வரவிருக்கிறது. அதன் படி புதிய திட்டங்கள் அறிவிக்கக் கூடாது. பிரச்சாரத்தின் போது பிற கட்சியின் செயல்பாடுகளை தவிர்த்த தனிப்பட்ட விமர்சனம் மற்றும் தாக்குதலில் ஈடுபடக்கூடாது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் அரசு பணியாளர்கள், பொதுத்துறை அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யக்கூடாது. அரசு விழாக்கள் நடத்தக்கூடாது போன்ற விதிகள் அமலுக்கு வரவிருக்கின்றன.
இதையும் படிக்க : தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி.. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் அதிருப்தி..
தமிழகத்தில் தற்போது வரை திமுக கூட்டணி, பாஜக, அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த தேர்தலில் 8 சதவிகித வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலில் வலுவான சக்தியாக நிலவும் என கூறப்படுகிறது.