தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… 10 ஆண்டுகளுக்கு பிறகு ஊதிய உயர்வு… எவ்வளவு தெரியுமா?

Tamil Nadu Assembly Election: தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான தேர்தல் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், தலைமை தேர்தல் அதிகாரி உள்ள அனைவருக்கும் எவ்வளவு தேர்தல் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு... 10 ஆண்டுகளுக்கு பிறகு ஊதிய உயர்வு... எவ்வளவு தெரியுமா?

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Published: 

03 Mar 2026 14:37 PM

 IST

தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை நடத்தி முடிப்பதற்காக ஒரு தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். இந்த அதிகாரிக்கு உதவியாக 3 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 45 ஆயிரத்து 160 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் கால ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியமானது வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் உயர்த்தி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முதல் முறையாக திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிக்கு ரூ.12,500 ஊதியம் ஒதுக்கீடு

இதில், தேர்தல் நாளுக்கான ஊதியம் மற்றும் 2 நாள்கள் கட்டாய பயிற்சிக்காகவும், தேர்தல் ஆணையம் ஒரு வாக்குச்சாவடிக்கு சுமார் ரூ.12,500- ஐ ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் தமிழக சட்டசபை தேர்தலுக்கான மொத்த செலவு ரூ. 100 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.350 ஊதியம் பெற்று வந்த தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், தற்போது ஒரு நாளுக்கு ரூ.500 அல்லது மொத்தமாக ரூ.2,000 வரை ஊதியம் பெற உள்ளனர்.

மேலும் படிக்க: “முதல்வர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?” நெல்லை கொலை சம்பவத்தை சுட்டிக் காட்டி விஜய் கேள்வி..

தேர்தல் ஆணைய ஊதிய செலவு ரூ.100 கோடி

ஒரு நாளுக்கு ரூ.250 கௌரவ ஊதியமாக பெற்று வந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் தற்போது, ஒரு நாளுக்கு ரூ.400 அல்லது மொத்தமாக ரூ.1,600 ஊதியம் பெற உள்ளனர். தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 032 சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு சாவடிக்கு 5 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில், தலைமை தேர்தல் அதிகாரிக்கு 2 நாள்கள் பயிற்சி உள்பட ஊதியம் ரூ.3,000 மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் 3 பேருக்கு தலா ரூ.2,600, அலுவலக உதவியாளர்களுக்கு ரூ.1,700 என மொத்தமாக ரூ.100 கோடிக்கு தேர்தல் ஊதிய செலவு உயர்ந்துள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்தல் பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். இவர்களுக்கான தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டு வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவு எண்ணும் நாள் ஆகியவற்றில் பணிகளில் அமர்த்தப்படுவார்கள். இவ்வாறு அமர்த்தப்படும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் ஊதியமாக தலைமை தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட ஊதியத்தை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சென்னையில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகம்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ