பீகார் முதல்வர் நிலைமை எனக்கு ஏற்படாது… புதுச்சேரி முதல்-அமைச்சர் என்.ரங்கசாமி நம்பிக்கை!

Puducherry CM Rangasamy: பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் நிலைமை தனக்கு ஏற்படாது என்றும், புதுச்சேரியில் எனது தலைமையில் ஆட்சி அமையும் என்று பாஜக தலைமை கூறியுள்ளதாக அந்த மாநிலத்தின் முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான என். ரங்கசாமி தெரிவித்தார்.

பீகார் முதல்வர் நிலைமை எனக்கு ஏற்படாது... புதுச்சேரி முதல்-அமைச்சர் என்.ரங்கசாமி நம்பிக்கை!

பீகார் முதல்வர் நிலைமை எனக்கு ஏற்படாது

Updated On: 

09 Apr 2026 17:16 PM

 IST

புதுச்சேரியில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக புதுச்சேரி மாநில முதல்வர் என். ரங்கசாமி தனது வீட்டில் இருந்து தனக்கு பிடித்த பைக்கான யமஹா ஆர் எக்ஸ் 100 பைக்கில் தட்டாஞ்சாவடி தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, மற்ற தொகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள தேர்தல் கள நிலவரத்தை கேட்டறிந்தார். பின்னர், வில்லியனூர் புறவழிச் சாலை பகுதியில் டீ கடையில் முதல்வர் என். ரங்கசாமி டீ அருந்திய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது. மாநில மக்கள் விழிப்புணர்வுடன் அதிகளவில் வாக்களித்து வருகின்றனர்.

மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி

இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்கள் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைந்ததும் ஒரு காரணம் ஆகும். மீண்டும் என். ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் வாக்களித்து வருகின்றனர். கிராம பகுதிகளில் வாக்கு சதவீதம் அதிகமாக இருப்பதற்கு இது ஒரு காரணமாகும். நான், கிராம பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது அந்த பகுதி மக்கள் என்னிடம் அதிக அளவு கேள்வி எழுப்பினர். ஏராளமான மக்கள் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதால் அதிக அளவில் கேள்வி எழுப்பினர்.

மேலும் படிக்க: புதுச்சேரி தேர்தல்.. வாக்களித்துவிட்டு பைக்கில் பறந்த முதல்வர் ரங்கசாமி.. வைரல் வீடியோ!!

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறப்பு

கடந்த மக்களவைத் தேர்தலின் போது புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து அரிசி மற்றும் கோதுமை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டனர். அதன்படி, ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது. அதன்படியே, தற்போதும் தங்களது தேவைகளை பொதுமக்கள் என்னிடம் கேட்டுள்ளனர். அதனை நான் செய்து தருவேன் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். புதுச்சேரியில் பெருவாரியான தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். புதுச்சேரியில் மீண்டும் எனது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பாஜக தலைமை என்னிடம் கூறியுள்ளது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நிலைமை எனக்கு ஏற்படாது

இதனால், எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது போல பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நிலைமை எனக்கு ஏற்படாது. பாஜக தலைமை சொல்வதை செய்வார்கள். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அந்த கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டனர். நாட்கள் குறைவாக இருந்ததால் எனது கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு மட்டுமே வாக்கு சேகரிக்க செல்ல முடிந்தது. மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை வைத்தே அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: புதுச்சேரி தேர்தல்.. வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம்?.. உச்சக்கட்ட பரபரப்பு!!

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?