தவெகவுக்கு ஓட்டு.. பேஸ்புக்கில் போஸ்ட்.. அதிரடி ஆக்சனில் இறங்கிய அதிகாரி!

Tvk Voting Video: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னத்துக்கு வாக்களித்ததை அந்தக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தவெகவுக்கு ஓட்டு.. பேஸ்புக்கில் போஸ்ட்.. அதிரடி ஆக்சனில் இறங்கிய அதிகாரி!

புதுச்சேரியில் தவெகவுக்கு வாக்களித்த வீடியோ வைரல்

Updated On: 

09 Apr 2026 20:15 PM

 IST

புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் இன்று 1,099 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. இதில், ஏராளமான வாக்காளர்கள் காலை முதல் மாலை வரை ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி சென்றனர். இவ்வாறு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையத்துக்குள் செல்போன்கள் கொண்டு செல்வதற்கும், செல்போன்கள் உபயோக படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சிலர் தமிழக வெற்றி கழகத்தின் விசில் சின்னத்துக்கு தங்களது வாக்குகளை செலுத்தி அதனை தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. அத்துடன், தவெகவின் விசில் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

தவகவுக்கு வாக்களித்த வீடியோ வைரல்

இந்த விவகாரம், தற்போது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் வாக்குச்சாவடி மையத்துக்குள் செல்போன்கள் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை தேர்தல் நடத்தும் அலுவலர்களின் கவனத்தை மீறி செல்போன்கள் எடுத்துச் செல்லப்பட்டு வாக்குப்பதிவை மறைமுகமாக பதிவு செய்திருப்பது தேர்தல் விதிகளின்படி குற்றமாகும். இது தொடர்பாக, புதுச்சேரி மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் நடத்தும் அலுவலர் குலோத்துங்கன் கூறுகையில், புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் விசில் சின்னத்துக்கு வாக்களித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: பண மழையில் நனையவிருக்கும் தமிழக மக்கள்… மாதம் ரூ.2000… காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

வீடியோ பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை

இந்த வீடியோக்கள் பதிவு செய்யப்பட்ட பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் கணக்குகளை நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளோம். வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன்கள் கொண்டு செல்வதற்கு தேர்தல் விதிகளின்படி தடை இருந்து வரும் நிலையில், இதனை மீறி செல்போனை கொண்டு சென்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர்கள் குறித்து விரைவில் அடையாளம் காணப்படும். அவர்கள் மீது, தேர்தல் விதிகளின்படி சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

கேள்விக்குறியான தேர்தல் விதிமுறைகள்

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அனைத்து தரப்பு மக்களுக்கும் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்படும். அவ்வாறு அமல்படுத்தப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்பது நடைமுறையாகும். அதன்படியே, வாக்குப்பதிவு நடைபெறும் மையத்துக்குள் செல்போன்கள் உபயோகப்படுத்தக் கூடாது என்பதும், எந்த கட்சிகளுக்கு வாக்களித்தோம் என்பதும் மறைமுகமாக வைக்கக் கூடிய ஒன்றாகும். ஆனால், இத்தகைய விதிமுறைகளை மீறி கட்சிக்கு வாக்களித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டது தேர்தல் விதிகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மேலும் படிக்க: புதுச்சேரியில் ஜனநாயக திருவிழா நிறைவு.. வாக்குப்பதிவில் புதிய வரலாறு – தெறிக்கவிட்ட மக்கள்!

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?