மாம்பழம் கை நழுவியது.. சிலிண்டர் சின்னம் கை கொடுத்தது.. 30 தொகுதிகளில் களமிறங்கும் ராமதாஸ் படை!

Ramadoss Team Cylinder Symbol Allotted: தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான அணியில் 30 தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

மாம்பழம் கை நழுவியது.. சிலிண்டர் சின்னம் கை கொடுத்தது.. 30 தொகுதிகளில் களமிறங்கும் ராமதாஸ் படை!

ராமதாஸ் அணிக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு

Updated On: 

10 Apr 2026 07:05 AM

 IST

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளன. இதனால், முன்பு இருந்ததை விட தேர்தல் களம் படுவேகமாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது, வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் தங்களது பணிகளை தீவிரப் படுத்தி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான அணிக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாமகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதனால், பாமக மற்றும் மாம்பழம் சின்னம் ஆகியவை அன்புமணி வசமே இருந்து வருகிறது. இந்த நிலையில், சசிகலா தொடங்கிய அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன், பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி அமைத்தார்.

ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்

அதன்படி, தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான 30 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை 3 கட்டங்களாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு இருந்தார். இதில், பென்னாகரம், தர்மபுரி உள்ளிட்ட 30 சட்டமன்ற தொகுதிகளில் ராமதாஸ் தலைமையிலான பாமக சுயேட்ச்சையாக போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் 30 வேட்பாளர்களுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் சிலிண்டர் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, வாக்காளர்கள் சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க: பண மழையில் நனையவிருக்கும் தமிழக மக்கள்… மாதம் ரூ.2000… காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

அன்புமணி வசம் இருக்கும் பாமக-மாம்பழம் சின்னம்

பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக அன்புமணி தரப்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. அவரிடமே பாமக என்ற கட்சியும், மாம்பழம் சின்னமும் இருந்து வருகிறது. இதனால், பாமக நிறுவனர் ராமதாஸ் பாமக மற்றும் மாம்பழம் சின்னத்தில் உரிமை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையம் அளித்துள்ள உத்தரவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி இருப்பதால் கட்சியும், சின்னமும் அவருக்கே சொந்தம் என்று தெரிவித்துள்ளது.

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி மேல் முறையீடு

இதனிடையே, மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், இந்த வழக்கு விசாரணை வழக்கமான முறையில் உரிய அமர்வில் பட்டியலிடப்படும் என்று தெரிவித்தது. இதனால், பாமக கட்சி மற்றும் மாம்பழம் சின்னம் விவகாரத்தில் ராமதாஸ் தரப்பு பின்னடைவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விஜய்யுடன் இருப்பது எந்த காங்கிரஸ் கட்சி தெரியுமா… கர்நாடக துணை முதல்வர் வைத்த ட்விஸ்ட்!

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?