பிரச்சாரத்தின்போது மேடையிலேயே மயங்கிய ராமதாஸ் – என்ன நடந்தது?
PMK Founder Ramadoss Faints : சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் தனது ஆதரவு வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென மேடையில் ராமதாஸ் உடல்நலக்குறைவால் மயக்கமடைந்திருக்கிறார். இதனையடுத்து அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்டிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ராமதாஸ்
சேலம், ஏப்ரல் 12 : சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் தனது ஆதரவு வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென மேடையில் ராமதாஸ் உடல்நலக்குறைவால் மயக்கமடைந்திருக்கிறார். இதனையடுத்து அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்டிருக்கிறார். பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட முரண் காரணமாக, பிரிந்து நின்று இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். நிர்வாகிகள் பெரும்பாலானோர் அன்புமணியின் பக்கமே நிற்பதால் மாம்பழச் சின்னம் அன்புமணிக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பிரச்சாரத்தின்போது மேடையிலேயே மயங்கிய ராமதாஸ்
இதற்கிடையில் சசிகலாவின் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியோடு கூட்டணி அமைத்த ராமதாஸ் தேர்தலை சந்தித்து வருகிறார். இதனையடுத்து அக்கட்சியுடன் இணைந்துள்ள அவர், 37 தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்தார். அதில் 30 வேட்பாளர்களுக்கு கேஸ் சிலிண்டர் சின்னமும் மற்றவர்களுக்கு வெவ்வேறு சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க : எடப்பாடி தொகுதியில் யாருக்கு ஆதரவு கொடுப்பது?.. குழப்பத்தில் தவெக தொண்டர்கள்!!
இந்தக் கூட்டணிக்காக தென் மாவட்டங்களில் சசிகலா பிரசாரத்தைத் தொடங்கிய நிலையில், வட மாவட்டங்களில் தன்னுடைய வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் ஏப்ரல் 12,. 2026 அன்று தனது கட்சி வேட்பாளர்கள= ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். இந்த நிலையில் ராமதாஸ் உடல்நலக்குறைவால் மயக்கமடைந்திருக்கிறார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ராமதாஸ் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்திற்கு சென்ற அன்பமணி ராமதாஸ், அங்கு தனது தாயார் சரஸ்வதியை சந்தித்தார். அப்போது அங்கு அவர் உணவருந்தினார். ராமதாஸ் பிரச்சாரத்திற்காக சேலம் சென்றுள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் இல்லத்துக்கு சென்றுள்ள கவனம் பெற்றுள்ளது. கடலூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அன்புமணி ராமதாஸ் சென்றார். செல்லும் வழியில் தனது தாயை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : கனிமொழி பிரசார வாகனத்தில் ஏறி கேள்வி கேட்ட காவலரின் மனைவி.. போராட்டக் களமாக மாறிய பரப்புரை
மாம்பழம் சின்னம் தொடர்பாக அன்புமணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று அன்புமணி ராமதாஸின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், உச்சநீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அனுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மாம்பழம் சின்னம் அன்புமணி தரப்பு வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது.