பிரதமர் மோடி நாகர்கோவில் வருகை.. 1.5 கி.மீ பிரம்மாண்ட ரோடு ஷோ.. குலுங்கப்போகும் குமரி!

PM Modi Roadshow In Nagercoil: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களைை ஆதரித்து நாகர்கோவிலில் பிரதமர் நேர்ந்திர மோடி இன்று பிரம்மாண்ட ரோடு ஷோ மேற்கொள்கிறார். அப்போது, தேஜ கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

பிரதமர் மோடி நாகர்கோவில் வருகை.. 1.5 கி.மீ பிரம்மாண்ட ரோடு ஷோ.. குலுங்கப்போகும் குமரி!

நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ

Published: 

15 Apr 2026 06:36 AM

 IST

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரல் விட்டு என்னும் வகையில் ஒரு வாரமே உள்ளது. தேர்தலில் வெற்றியை மையமாக வைத்து அரசியல் கட்சியினர் தங்களது வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 15) நாகர்கோவிலில் ரோடு ஷோ மேற்கொண்டு தீவிர பரப்புரை பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வந்தடைகிறார். அங்கிருந்து இன்று பிற்பகல் 3:30 மணிக்கு தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 4:10 மணி அளவில் நாகர்கோவில் வந்து சேர்கிறார். தொடர்ந்து, 4:15 மணிக்கு நாகர்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு பகுதியில் இருந்து வேப்பமூடு பகுதிக்கு காரில் வருகிறார்.

1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரதமர் ரோடு ஷோ

அங்கு, மாலை 4:30 முதல் 5:30 வரை வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரம்மாண்ட ரோடு ஷோ வில் பங்கேற்கிறார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். ரோடு ஷோ நிறைவடைந்த பிறகு மாலை 5:45 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். பின்னர், அங்கிருந்து மாலை 6:20 மணியளவில் தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.

மேலும் படிக்க: திருப்பூரில் விஜய்யின் பரப்புரை.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த 14 பேர்..

கோவையில் 18- ஆம் தேதி பிரதமர் பங்கற்கும் பொதுக்கூட்டம்

இதேபோல, வருகிற 18-ஆம் தேதி கோவையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த இரு கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றி இருந்தார். இதே போல, திருச்சியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பேசியிருந்தார்.

மேலும் வலு சேர்க்கும் வகையில் பிரதமர் ரோடு ஷோ

அந்த பகுதியில், பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், கடைசி நேரத்தில் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் பல்வேறு கட்ட தேர்தல் மற்றும் கட்சி பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது, அந்த முன்னெடுப்புகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ மற்றும் பிரச்சாரம் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க: வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன்.. விவசாயிகள், நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..

Follow Us
Related Stories
நம் ஓட்டு நம் உரிமை.. வாட்ஸ் ஆப் வழியாக வீடு தேடி வரும் தேர்தல் விழிப்புணர்வு.. தேர்தல் ஆணையம் மாஸ் பிளான்!
சட்டமன்ற தேர்தல்.. சிறையில் இருந்து ஜனநாயக கடமை… 61 கைதிகளுக்கு வாக்களிக்க வாய்ப்பு!
“அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் விஜய்”.. திருமாவளவன் பகிரங்கக் குற்றச்சாட்டு!!
ஊழல் அரசியல்வாதிகள் ரத்தம் கக்க வேண்டும்.. சுடுகாட்டில் விபரீத பூஜை செய்த சுயேட்சை வேட்பாளர்.. முழு விவரம் உள்ளே!
Tamil Nadu Election 2026 Live: நெருங்கும் தேர்தல்… இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி!
Arakonam Constituency Election 2026: இந்தியாவின் முக்கிய ரயில்வே ஜங்ஷன்களில் ஒன்றான அரக்கோணம் தொகுதி.. மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனை என்ன?
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்