கிடைத்தது அனுமதி… விஜய் பேச்சுக்கு தயாராகும் கடலூர்… நாளை பிரம்மாண்ட பரப்புரை!

Tvk Leader Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடலூர் மாவட்டத்தில் நாளை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து 3 இடங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. நாளை விஜய் கடலூர் பயணம் மேற்கொள்கிறார்.

கிடைத்தது அனுமதி... விஜய் பேச்சுக்கு தயாராகும் கடலூர்... நாளை பிரம்மாண்ட பரப்புரை!

கடலூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி

Published: 

08 Apr 2026 11:37 AM

 IST

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் ஆகியோர்கள் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் தனித்து களம் காண உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பரப்புரை மேற்கொண்டார். இதே போல, நாளை வியாழக்கிழமை ( ஏப்ரல் 9) கடலூரில் விஜய் பரப்புரை மேற்கொள்வதற்கு கட்சி சார்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

மஞ்சக்குப்பம் மைதானத்தில் விஜய் பரப்புரைக்கு அனுமதி

இந்த மனு மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பரப்புரை கூட்டம் நடைபெற உள்ள இடத்தையும் ஆய்வு செய்து அனுமதி வழங்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் காவல்துறை ஆய்வு மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பிரச்சாரம் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சேத்தியாதோப்பு, வடலூர், தொழுதூர் ஆகிய பகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள்.. 5,900 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

3 பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள திட்டம்

இந்த பரப்புரைக்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தவெக சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரையிலும், சேத்தியாத்தோப்பில் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் விஜய் பிரச்சாரம் நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

தவெக பரப்புரை அனுமதிக்கு மறுப்பு

இதே போல, திட்டக்குடியில், விருதாச்சலம் மற்றும் திட்டக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரை பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்க கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அனுமதி மறுத்த தேர்தல் அதிகாரிகள், மஞ்சக்குப்பம் மைதானத்தில் மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பிரச்சாரம் நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: நெல்லையில் இன்று விஜய் பிரப்புரை.. 4 மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டல்.. ரோடு ஷோ செல்ல திட்டம்..

Follow Us
Related Stories
திமுக அமைச்சர்கள் சொத்து பட்டியல் பார்ட் 2: ராஜ கண்ணப்பன் முதல் சக்கரபாணி வரை… முழு விவரம் உள்ளே!
திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல்… அமைச்சர் காந்தி முதல் பெரியகருப்பன் வரை!
கரூர் சம்பவம் முதல் விவாகரத்து வரை… திமுக – பாஜகவை விமர்சித்து கர்ஜித்த விஜய்!
“ஸ்டாலின் தான் வந்தாரு; நீச்சல் அடிக்க விட்டாரு”.. வேளச்சேரி பரப்புரையில் இபிஎஸ் விளாசல்!!
புதுச்சேரியில் முடிந்த தேர்தல் பரப்புரை.. நான்கு முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்?.. அனல் பறந்த தேர்தல் களம்!!
நெல்லையில் இன்று விஜய் பிரப்புரை.. 4 மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டல்.. ரோடு ஷோ செல்ல திட்டம்..
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?