P. Geetha Jeevan Tamil Nadu Election: திமுகவில் ஒரே பெண் அமைச்சர்… தூத்துக்குடி தொகுதியை தக்க வைப்பாரா கீதா ஜீவன்!

Tamil Nadu Elections 2026: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது முதல் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருபவரும், திமுக அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சருமான பெ.கீதா ஜீவன் மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடிப்பாரா.

P. Geetha Jeevan Tamil Nadu Election: திமுகவில் ஒரே பெண் அமைச்சர்... தூத்துக்குடி தொகுதியை தக்க வைப்பாரா கீதா ஜீவன்!

அமைச்சரவையில் மீண்டும் இடம் பிடிப்பாரா பெ.கீதா ஜீவன்!

Updated On: 

03 Apr 2026 12:24 PM

 IST

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமாக இருந்து வருபவர் பெ.கீதா ஜீவன். இவர், கடந்த 1970- ஆம் ஆண்டு மே 6- ஆம் தேதி பெரியசாமி தம்பதிக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தை பெரியசாமி முன்னாள் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் அரசியல் ஈடுபாடு காரணமாகவும், அரசியல் சார்ந்த குடும்பம் என்பதாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1996- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு வரை உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றினார். இதனிடையே, 1996 முதல் மாவட்ட மகளிரணி உறுப்பினர், 2011- இல் திமுக மாநில மகளிரணி துணை செயலர், பின்னர், தலைமை செயற்குழு உறுப்பினர், 2017- ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி மாவட்ட திமுக பொறுப்பாளர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், 2001- ஆம் ஆண்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தார் கீதா ஜீவன்.

முதல் முறையாக வற்றியை பதிவு செய்த கீதா ஜீவன்

பின்னர், 2006 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் களமிறக்கப்பட்ட கீதா ஜீவன் வெற்றியை பதிவு செய்தார். முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வாகி சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தார். பின்னர், 2011 மக்களவைத் தேர்தலில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கீதா ஜீவன் தோல்வியை தழுவி இருந்தார். பின்னர், 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கீதா ஜீவன் 2- ஆவது முறையாக தனது வெற்றியை நிலை நிறுத்தினார்.

மேலும் படிக்க: D. Jayakumar Tamil Nadu Election: 5 முறை வெற்றி.. 2 முறை தோல்வி… ராயபுரத்தில் வெற்றிக் கனியை தட்டி பறிப்பாரா ஜெயக்குமார்!

திமுக அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சர்

பின்னர், 2021- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் களமிறக்கப்பட்ட கீதா ஜீவன் எம்எல்ஏவாக தேர்வானதுடன், முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சராக இருந்து வருகிறார். அத்துடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்ற பொறுப்பையும் வகித்து வருகிறார். இதற்கு முன்பு தமிழக கால்நடை வளர்ப்பு துறை அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். 2011 சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் களமிறங்கிய கீதா ஜீவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை வீழ்த்தி 1,86,311 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்தார்.

அமைச்சரவையில் மீண்டும் கீதா ஜீவனுக்கு வாய்ப்பு

இதேபோல, 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்ட கீதா ஜீவன் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜய் சீலனை வீழ்த்தி 92,314 வாக்குகள் பெற்று வெற்றியை தனதாக்கி கொண்டார். மீண்டும் இதே தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கீதா ஜீவன் வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Edappadi k.palaniswami Tamil Nadu Election: எடப்பாடி தொகுதியில் 5 முறை வெற்றியை பதிவு செய்த கே.பழனிசாமி!

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்