திருச்சி கிழக்கு தொகுதிக்கு மும்முனை போட்டி… மதிமுகவின் பலே திட்டம்… எந்த கட்சிக்கு ஒதுக்கும் திமுக!

Trichy East Constituency: தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிடம் இருந்து திருச்சி கிழக்கு தொகுதியை கேட்டு பெற்று போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திட்டம் தீட்டி வருகிறது. இந்த தொகுதிக்கு மும்முனை போட்டி நடைபெற்று வருகிறது.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு மும்முனை போட்டி... மதிமுகவின் பலே திட்டம்... எந்த கட்சிக்கு ஒதுக்கும் திமுக!

திருச்சி கிழக்கு தொகுதிக்கு குறி வைக்கும் மதிமுக

Published: 

21 Mar 2026 07:53 AM

 IST

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை வெளியீடு என பரபரப்பாக இருந்து வருகிறது. இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மதிமுகவுக்கு 4 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தங்கள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளான மதுரை தெற்கு, திருச்சி கிழக்கு, மணப்பாறை, சாத்தூர், வேளச்சேரி, கோவில்பட்டி, கடலூர் அல்லது புவனகிரி, நெல்லை அல்லது பாளையங்கோட்டை, பல்லடம், கிணத்துக்கடவு ஆகிய 10 தொகுதிகளை மதிமுகவின் பொது செயலாளர் வைகோ தேர்வு செய்து திமுக தலைமை இடம் அளித்துள்ளார். இதில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியும் அவர்களது விருப்ப தேர்வில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க கோரி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திருச்சி கிழக்கு தொகுதியை கைப்பற்ற மதிமுக திட்டம்

இந்த நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று மதிமுக திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால், அந்த தொகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது தான் காரணம் என கூறப்படுகிறது. அதன்படி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் துறை வைகோ தனி சின்னத்தில் (தீப்பெட்டி) போட்டியிட்டு 3.5 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

மேலும் படிக்க: பெரம்பூர் தொகுதியில் களமிறங்கும் விஜய்… கை கொடுக்குமா? காலை வாருமா? கள நிலவரம் கூறுவதென்ன!

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு பரிச்சயமான சின்னம்

அந்த வகையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு பரிச்சயமான தீப்பெட்டி சின்னத்தில் சட்டமன்ற உறுப்பினரை நிறுத்தினால், மதிமுகவுக்கு வெற்றி எளிதாக கிடைக்கும் என அக்கட்சியின் தலைமை கருதுகிறது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, ஸ்ரீரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ( தனி) ஆகிய 9 தொகுதிகள் உள்ளன. இதில், கடந்த 2021 செப்டம்பர் தேர்தலில் மணப்பாறை தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் திமுகவே வெற்றியை பெற்றிருந்தது.

எந்த கட்சி வசம் செல்லும் திருச்சி கிழக்கு தொகுதி

இதனால், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளும் திமுகவின் வசமாகவே இருந்து வருகிறது. இதே வெற்றி வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்று திமுக தலைமை விரும்பி வருகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியை திமுக தன் வசமே வைத்துக் கொள்ளுமா அல்லது கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட், காங்கிரஸ், மதிமுக கட்சிகளில் எந்த கட்சிக்கு வழங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க: 23ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.. எங்கே தெரியுமா?

Follow Us
Related Stories
23ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.. எங்கே தெரியுமா?
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக போட்டியிடும் தொகுதிகள்… வெளியானது உத்தேச பட்டியல்!
சட்டமன்ற தேர்தல்… வேட்பாளர்களின் கவனத்துக்கு… சமூக வலைதளங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு!
Sivakasi Constituency Election 2026: குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி சட்டமன்ற தொகுதி.. பட்டாசு தொழிலாளர்களின் கோரிக்கையை யார் நிறைவேற்றுவார்?
Tiruparankundram Constituency Election 2026: அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்த திருப்பரங்குன்றம் தொகுதி.. அதிமுகவின் கோட்டை.. இந்த முறையும் வெற்றி கிடைக்குமா?
மதுரை கலெக்டரை மாற்ற வேண்டும் – பாஜக சார்பில் மனு
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்