Maduravoyal Constituency Election 2026: மதுரவாயல் சட்டமன்ற தொகுதி.. பல ஆண்டுகளாக மக்கள் வைக்கும் கோரிக்கை.. அதிமுக – திமுக – தவெக..

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி கிட்டத்தட்ட 1,21,298 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அதே சமயத்தில் அதிமுக வேட்பாளர் பெஞ்சமின் 89,577 வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி கிட்டத்தட்ட 31,721 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

Maduravoyal Constituency Election 2026: மதுரவாயல் சட்டமன்ற தொகுதி.. பல ஆண்டுகளாக மக்கள் வைக்கும் கோரிக்கை.. அதிமுக - திமுக - தவெக..

கோப்பு புகைப்படம்

Updated On: 

16 Mar 2026 14:53 PM

 IST

மார்ச் 16, 2026: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழகத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியும் தனித்துவமான முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சென்னை அருகே அமைந்துள்ள மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி முக்கியமான தொகுதியாக கருதப்படுகிறது. இந்த தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன், சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியை பொருத்தவரையில் மதுரவாயல், நொலம்பூர், நெற்குன்றம், வானகரம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன.

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி:

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி கிட்டத்தட்ட 1,21,298 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அதே சமயத்தில் அதிமுக வேட்பாளர் பெஞ்சமின் 89,577 வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி கிட்டத்தட்ட 31,721 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியை எடுத்துக் கொண்டால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இரு கட்சிகளுக்கும் சுமார் 50 சதவீதம் வரை வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

2026 சட்டமன்ற தொகுதி யார் போட்டி?

கடந்த தேர்தல் வரலாற்றைப் பார்த்தால், 2021 ஆம் ஆண்டு திமுக வேட்பாளர் கணபதி, 2016 ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளர் பெஞ்சமின் மற்றும் 2011 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பீம்ராவ் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான கணபதி திமுக கூட்டணி சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் அதிமுக கூட்டணியில் ஏற்கனவே களம் கண்ட பெஞ்சமின் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் படிக்க: பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை மாற்றம்; கோவை எக்ஸ்பிரஸுக்கு புதிய நிறுத்தம்

நிலவும் முக்கிய பிரச்சனைகள் என்ன?

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி முக்கியமான தொகுதியாக இருந்தாலும், இப்பகுதியில் சில அடிப்படை பிரச்சனைகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக நொலம்பூர், வானகரம் போன்ற பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் சென்னை துறைமுகம்–மதுரவாயல் உயர்மட்டச் சாலை திட்டம் தாமதமாக இருப்பதும் இந்த நெரிசலுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அதேபோல் பருவமழை காலங்களில் நெற்குன்றம், நொலம்பூர் போன்ற பகுதிகளில் மழை காரணமாக தண்ணீர் தேங்குதல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது மக்களை பாதித்து வருகிறது. இப்பகுதிகளில் முழுமையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததே இதற்கான காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தவெகவிற்கு வாய்ப்பு?

மேலும் குப்பை அகற்றுதல் மற்றும் குப்பை மேலாண்மை பணிகள் சீராக நடைபெறவில்லை என்றும், இதற்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றி கழகமும் இந்தத் தொகுதியில் தனது தாக்கத்தை வெளிப்படுத்துமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

Follow Us
Related Stories
கூட்டணி கட்சிகளுக்காக விசிக சரியாகப் பணியாற்றவில்லை.. நிர்வாகிகளை விளாசிய திருமாவளவன்..
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்.. வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் எத்தனை பேர்?.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முழு விவரம்!
Tamil Nadu Election 2026 Results Live Streaming: தமிழ்நாடு தேர்தல் முடிவுகளை எங்கு, எப்போது பார்க்கலாம்?.. முழு விவரம்!!
பாஜகவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு.. முகவர்களுக்கு தேர்தல் பொறுப்பாளர் முக்கிய உத்தரவு!
தேர்தல் முடிவுக்கு ரெடியா? எடப்பாடியுடன் மாஜிக்கள் திடீர் சந்திப்பு.. சேலத்தில் நடப்பது என்ன?
வாக்கு எண்ணும் பணி… புதுச்சேரியில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிப்பு!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..