AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்திய தேர்தல்களில் பிரசாரங்களின் முக்கியத்துவம் மற்றும் விதிகள்!

How Election Campaigns Works In India | இந்திய தேர்தல்களில் மிக முக்கிய அம்சமாக தேர்தல் பிரசாரங்கள் உள்ளன. இந்த நிலையில், தேர்தல் பிரசாரங்களின் முக்கியத்துவம் என்ன, அதற்கு வகுக்கப்படும் நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய தேர்தல்களில் பிரசாரங்களின் முக்கியத்துவம் மற்றும் விதிகள்!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Mar 2026 13:10 PM IST

தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் (Assembly Election) நடைபெற உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரங்களை (Election Campaign) மேற்கொள்ள தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றன. சில கட்சிகளும், வேட்பாளர்களும் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். தேர்தல் நடைபெறும் வரை கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும். இந்த நிலையில், தேர்தல் பிரசாரங்கள் எப்படி நடைபெறும், தேர்தல் பிரசாரங்களின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேர்தல் பிரசாரங்களின் முக்கியத்துவம் என்ன?

தேர்தலில் கட்சிகள் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் அந்த கட்சி மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரத்தை மையப்படுத்தியே இருக்கும் என்று சொன்னால் அது மிகை ஆகாது. மக்களிடம் தங்களது கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களை கொண்டு சேர்க்க கூடிய முக்கிய அம்சமாக தேர்தல் பிரசாரங்கள் உள்ளன. வாக்குறுதிகளை வழங்குவது, குறைகளை கேட்பது, முறையீடுகள், தவறுகள் என அனைத்தையும் தெரிந்துக்கொண்டு அதற்கு ஏற்ப பணிகளை மேற்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக தேர்தல் பிரசாரங்கள் இருக்கும். காரணம், தேர்தல் பிரசாரங்களின் போது கட்சிகள் நேரடியாக மக்களை தொடர்ப்புக்கொள்ளும். இதன் மூலம் மக்களின் மனநிலை என்ன, அவர்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப தேர்தல் வாக்குறுதிகள் வழங்குவது, கள பணிகளை மேற்கொள்வது என அனைத்தையும் மேற்கொள்ள முடியும்.

இதையும் படிங்க : புதுச்சேரியில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… முன்னாள் பாஜக அமைச்சர்- EX ஐபிஎஸ் அதிகாரிக்கு வாய்ப்பு!

தேர்தல் பிரசாரங்களின் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்

தேர்தல் பிரசாரங்களின் போது சில முக்கிய விதிகளை கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.

பொதுக்கூட்டங்களுக்கான விதிகள்

  1. கட்சி அல்லது வேட்பாளர் சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடம், நேரம் ஆகியவை குறித்து காவல்துறையிடன் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
  2. பொதுக்கூட்டம் நடத்த தேர்வு செய்யப்படும் இடத்தில், அதற்கான தடை ஏதேனும் உள்ளதா என்பதை கட்சியோ அல்லது வேட்பாளரோ உறுதி செய்ய வேண்டும்.
  3. ஒருவேளை தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கான தடைகள் ஏதேனும் இருந்தால் முன்கூட்டியே அதிகாரிகளிடம் மனு வழங்கி அதற்கு தீர்வு காண வேண்டும்.
  4. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் ஒலிபெருக்கி உள்ளிட்டவற்றுக்கான தேவை இருக்கும் பட்சத்தில் முன்கூட்டியே அதற்கும் அனுமதி பெற வேண்டும்.
  5. பொதுக்கூட்டம் முறையாக நடைபெறுவதற்கு யாரேனும் தடையாக இருந்தாலோ, விதிகளை மீறி செயல்பட்டாலோ பொதுக்கூட்டத்தை நடத்தும் கட்சியோ, வேட்பாளரோ அவர் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்க கூடாது. முறையாவ காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

இதையும் படிங்க : புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – வேட்பாளர்களை அறிவித்த சசிகலா

தேர்தல் பிரசாரம் எதுவரை நடத்தலாம்?

தேர்தல் ஆணைய விதிகளின்படி, கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும். அதவாது, தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவே பிரசாரங்களை முடித்துக்கொள்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us