ஒரு தொண்டனாக, தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன் – அண்ணாமலை பதிவு..

இந்த நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஊழல் மற்றும் திமுகவின் துரோகத்தால் சோர்வடைந்த தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரர், சகோதரிகளின் ஆதரவையும் அவர்கள் பெற்றுள்ளனர்.

ஒரு தொண்டனாக, தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன் - அண்ணாமலை பதிவு..

கோப்பு புகைப்படம்

Published: 

03 Apr 2026 16:35 PM

 IST

சென்னை, ஏப்ரல் 3, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

இருந்தபோதிலும், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஒரு தொண்டனாகிய நான், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், வெற்றி பெறும் நமது பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாத அண்ணாமலை பெயர்:

2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியாக எடுத்துக்கொண்டால், அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில், பாஜகவிற்கு 27 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்றன. அதாவது, கட்சி மேலிடம் தரப்பில் அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தப்பட்டதாகவும், ஆனால் அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், அவர் கேட்ட தொகுதி கிடைக்காததால் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அண்ணாமலை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தே.ஜ கூட்டணி வேட்பாளர்கள் ஆதரித்து பிரச்சாரம் செய்வேன்

இந்த நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஊழல் மற்றும் திமுகவின் துரோகத்தால் சோர்வடைந்த தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரர், சகோதரிகளின் ஆதரவையும் அவர்கள் பெற்றுள்ளனர். நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ் இந்தியா வலிமையுடனும் பரந்த நோக்கத்துடனும் முன்னேறியுள்ளது.

மேலும் படிக்க: வெற்றி ஒன்றே இலக்கு, ஓய்வின்றி உழைக்கும் கழக செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள் – முதல்வர் ஸ்டாலின்..

தேசம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், தோல்வியடைந்த ஆணவமிக்க, சுயநலமிக்க திமுக அரசால் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது. ஒரு தொண்டனாகிய நான், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், வெற்றி பெறும் நமது பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..