தமிழக சட்டமன்ற தேர்தல்.. இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!

Final Election Candidates List Will Be Released | தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. மேலும் வேட்புமனுக்களை திரும்ப பெறும் கடைசி நாளாகவும் உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்.. இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

09 Apr 2026 06:50 AM

 IST

சென்னை, ஏப்ரல் 09 : தமிழகத்தில் விரைவில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் (2026 Tamil Nadu Assembly Election) நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், இறுதி வாக்காளர்கள் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. அதுமட்டுமன்றி வேட்புமனுக்களை திரும்ப் பெறும் கடைசி நாளாகவும் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏப்ரல் 23-ல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் தமிழ்நாடு

தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30, 2021 தொடங்கியது. அது முதல் ஏப்ரல் 06, 2026 வரை என மொத்தம் 8 நாட்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த 8 நாட்களில் 4 நாட்கல் விடுமுறை என்பதால் வெறும் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அவகாசம் கிடைத்தது.

இதையும் படிங்க : தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி

6 நாட்கலின் மொத்தம் 12,963 வேட்புமனுக்கள் தாக்கல்

  • வேட்புமனு தாக்கலின் முதல் நாளான மார்ச் 30, 2026 அன்று 573 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
  • 2 ஆம் நாளான ஏப்ரல் 02, 2026 அன்று மொத்தம் 1,361 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
  • 3 ஆம் நாளான ஏப்ரல் 04, 2026 அன்று மொத்தம் 3,430 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
  • 4 ஆம் நாளான ஏப்ரல் 06, 2026 அன்று மொத்தம் 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வாறு வேட்பாளர்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் அந்த தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். இந்த பரிசீலனையில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 7,599 மனுக்களில் 5,081 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 2,480 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், 38 வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையும் படிங்க : திமுக அமைச்சர்களில் குறைந்த சொத்து மதிப்புடையவர் யார் தெரியுமா… கவனம் ஈர்க்கும் தகவல்!

வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள்

இன்று வேட்புமனுக்களை திரும்ப பெறவும் கடைசி நாளாக உள்ளது. மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தவர் நேரில் வந்தோ அல்லது அவரின் அங்கீகாரம் பெற்ற முகவர் மூலமாகவோ வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?