2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு?.. இன்று வெளியாகிறது Exit Poll!

2026 Tamil Nadu Assembly Election Exit Poll | தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பான எக்ஸிட் போல் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாக உள்ளது.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு?.. இன்று வெளியாகிறது Exit Poll!

மாதிரி புகைப்படம்

Updated On: 

29 Apr 2026 08:15 AM

 IST

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் (2026 Tamil Nadu Assembly Election) நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் தமிழ்கத்தில் திருப்புமுணை தேர்தலாக அமையும் என்று கூறப்படுகிறது. காரணம், இந்த தேர்தல் திமுக, அதிமுக, தவெக, நாதக என பலமுனை போட்டியாக நடைபெற்று முடிந்துள்ளது. இதன் காரணமாக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என தெரிந்துக்கொள்ள பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இன்று (ஏப்ரல் 29, 2026) தேர்தலுக்கு பிந்தைய வாக்குப்பதிவு அதாவது எக்ஸிட் போல்களை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு மேல் எக்சிட் போல் வெளியாகும்.

எக்சிட் போல் என்றால் என்ன?

எக்சிட் போல் என்பது வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஆகும். அதாவது தேர்தல் நாளில் வாக்களித்துவிட்டு, வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியே வரும் பொதுமக்களிடம் அவர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பது குறித்து நடத்தப்படும் கருத்துக்கணிப்பு ஆகும். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக இந்த கருத்துக்கணிப்பு வெளியாகும் நிலையில், தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து ஓரளவு கணிக்க முடியும். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து ஊடகங்கள் மற்றும் தனியார் முகமைகளால் நடத்தப்படும் கருத்துக்கணிப்பாக உள்ளது.

இதையும் படிங்க : 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை.. முதலில் தபால் வாக்கு – தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்

எக்ஸிட் போலுக்கு தற்காலிக தடை விதித்த தேர்தல் ஆணையம்

பொதுவாக தேர்தல் முடிந்ததுமே எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கும். ஆனால், இந்த ஆண்டு தேர்தல் முடிந்து சில நாட்கள் ஆகியும் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகமல் உள்ளது. காரணம் எக்சிட் போல் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் இடைக்கால தடை விதித்தது தான். தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது.

இதையும் படிங்க : முதலில் தபால் வாக்குகள் – வாக்கு எண்ணும் வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

இதில் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவடைந்துள்ளது. மேற்கு வங்கத்திற்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், நாளை தான் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணி அளவில் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ள நிலையில், 6 மணிக்கு மேல் எக்ஸிட் போல் வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு பிறகு ஊடகங்கள் மற்றும் தனியார் முகமைகள் எக்ஸிட் போல் விவரங்களை வெளியிட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..