நெருங்கும் தேர்தல்.. 2,160 பறக்கும் படைகள் அமைப்பு.. ரூ.23.28 கோடி பறிமுதல்..
ஒவ்வொரு தொகுதியிலும் 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலைக் கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்படி தமிழகம் முழுவதும் 2160 பறக்கும் படைகள் மற்றும் 2160 நிலைக் கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இக்குழுக்கள் மூலம் மார்ச் 17, 2026 வரை ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கோப்பு புகைப்படம்
சென்னை, மார்ச் 17, 2026: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் சமமான சூழலை உருவாக்கும் நோக்கில் தேர்தல் செலவுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன. ஒரு வேட்பாளர் சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்க மாவட்ட அளவில் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையில் பணியாற்றுகின்றன. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலைக் கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட 25 துறைகளைச் சேர்ந்த குழுக்கள் செயல்படுகின்றன. இதில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளும் அடங்குகின்றனர்.
மேலும் படிக்க: சென்னையில் அதிர்ச்சி: மனைவி மீது கணவர் ஆசிட் தாக்குதல்
2160 பறக்கும் படை அமைப்பு:
ஒவ்வொரு தொகுதியிலும் 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலைக் கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்படி தமிழகம் முழுவதும் 2160 பறக்கும் படைகள் மற்றும் 2160 நிலைக் கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இக்குழுக்கள் மூலம் மார்ச் 17, 2026 வரை ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: ஜி பே ட்ரான்ஸ்ஃபரில் வாக்கு வேட்டை: வங்கிகளுக்கு கடும் அலர்ட்..!
பொதுமக்கள் புகார் தெரிவிக்க மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதுவரை தமிழகம் முழுவதும் 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 61 இடங்களில் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள்:
மேலும் தேர்தல் விதிகளின்படி மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை. ஆனால் தற்போது அரசியல் களத்தில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் அரசு கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்தால் அவை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் மறைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகளவு பணத்தை எடுத்துச் செல்லும்போது அதன் ஆதார ஆவணங்களை சமர்ப்பித்தால், அது வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கான பணமல்ல என உறுதி செய்யப்பட்ட பின் மீண்டும் உரியவரிடம் திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.