Special Intensive Revision: பீகாரை தொடர்ந்து 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி.. தேர்தல் ஆணையர் அறிவிப்பு..!

Election Commission of India: வாக்காளர் திருத்தப்பணியின் 2ம் கட்டம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும் பீகாரில் SIR முழுமையாக வெற்றி பெற்றதைப் போலவே, இரண்டாம் கட்டத்தில் இந்த செயல்முறை நடத்தப்படும் மாநிலங்களிலும் இது வெற்றி பெறும் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

Special Intensive Revision: பீகாரை தொடர்ந்து 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி.. தேர்தல் ஆணையர் அறிவிப்பு..!

இந்திய தேர்தல் ஆணையம்

Published: 

27 Oct 2025 17:20 PM

 IST

பீகாரில் தேர்தல் (Bihar Election) பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் இப்போது தயாராகி வருகிறது. அதன்படி, சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் (Gyanesh Kumar) வெளியிட்டார். அதில், பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டத்தை இப்போது செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், இதன் 2ம் கட்டம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும் பீகாரில் SIR முழுமையாக வெற்றி பெற்றதைப் போலவே, இரண்டாம் கட்டத்தில் இந்த செயல்முறை நடத்தப்படும் மாநிலங்களிலும் இது வெற்றி பெறும் என்றார்.

சிறப்பு தீவிர திருத்தம்:

சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “ சத் பண்டிகைக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். SIR இன் நோக்கம் தகுதியற்ற வாக்காளர்களை நீக்கி தகுதியானவர்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும். இரண்டாம் கட்டத்தில், SIR 12 மாநிலங்களில் நடத்தப்படும், இவை அனைத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள். பிரிவு 326 இன் கீழ், வாக்காளராக இருக்க இந்திய குடிமகனாக இருப்பது கட்டாயம். சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் மாநிலங்களுக்கான வாக்காளர் பட்டியல் இன்று நள்ளிரவு 12 மணிக்கு முடக்கப்படும்” என்றார்.

ALSO READ: லிஸ்டில் 5 சின்னம்.. விசில் தான் வேண்டும்.. தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க த.வெ.க திட்டம்..

தேர்தல் ஆணையர் கூறியது என்ன..?


தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரியும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரியும் (ERO) பணியில் அமர்த்தப்படுவார்கள். அனைத்து வாக்காளர்களுக்கும் இன்று கணக்கெடுப்பு படிவங்கள் (EF) அச்சிடப்படும். ஒவ்வொரு வாக்காளர் பதிவு அதிகாரியும் தகவல்களைச் சேகரிக்க ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை வருகை தருவார்கள். தங்கள் தொகுதிக்கு வெளியே உள்ள வாக்காளர்களும் இந்தப் படிவத்தை ஆன்லைனில் நிரப்ப முடியும். இந்தச் செயல்பாட்டின் போது கூடுதல் ஆவணங்கள் அல்லது படிவங்கள் எதுவும் தேவையில்லை.” என்றார்.

ALSO READ: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: இன்று வெளியாகிறது அறிவிப்பு

காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகள் குறித்து அவ்வப்போது புகார் அளித்து வரும் நிலையில், 1951 முதல் 2004 வரை எட்டு முறை இதுபோன்ற திருத்தம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.