விசிக வலிமைக்கு ஏற்ப தொகுதிகள்.. திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் வலியுறுத்தல்.. திருமாவளவன்!

DMK-VCK Seat Sharing : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வலிமை மற்றும் பங்களிப்புக்கு இணையாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விசிக வலிமைக்கு ஏற்ப தொகுதிகள்.. திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் வலியுறுத்தல்.. திருமாவளவன்!

விசிக வலிமைக்கு ஈடாக தொகுதி ஒதுக்கீடு வேண்டும்

Updated On: 

02 Mar 2026 12:08 PM

 IST

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் டி.ஆர். பாலு தலைமையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன், துரை ரவிக்குமார் ஆகியோருடன் இன்று திங்கள்கிழமை ( மார்ச் 2) பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026 சட்டமன்ற தேர்தல் வழக்கமான தேர்தல் கிடையாது. இந்த தேர்தலில் தமிழகத்தில் வலதுசாரி கட்சிகளை காலூன்ற விடாமல் தடுப்பதற்காகவும், மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றியை 100% உறுதிப்படுத்துவதற்கான நோக்கத்தோடு இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்து வருவதை பேச்சு வார்த்தையில் பகிர்ந்து கொண்டோம். திமுகவுடன் பேரம் பேசுகிற கட்சியாக விசிக இல்லை. திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது தமிழகம் மற்றும் தமிழக மக்களுக்கான வெற்றி ஆகும்.

விசிக வலிமைக்கு ஏற்ப தொகுதிகள் வேண்டும்

மேலும், எங்களது அதிகார பகிர்வு குறித்து கருத்துக்களை மனம் திறந்து பகிர்ந்து உள்ளோம். திமுக தரப்பில் எங்களது கருத்துக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் விவாதித்த பிறகு இது குறித்து பேசுவதற்கான அழைப்பு விடுப்போம் என்று கூறியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை சமூகமாக நடைபெற்றுள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேசவில்லை. எங்கள் வலிமை மற்றும் பங்களிப்புக்கு ஏற்ப அதிகார பகிர்வு அமைய வேண்டும் என்பது குறித்தும், எத்தனை தொகுதிகள் என்பது குறித்தும் தெரியப்படுத்தியுள்ளோம்.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்யும்போது வருத்தமாக இருந்தது – பிரதமர் மோடி வேதனை

புதுச்சேரியில் 3 தொகுதிகள் கேட்டுள்ளோம்

இதே போல, புதுச்சேரியிலும் ஒரு பொது தொகுதி மற்றும் தனி தொகுதியில் இடம் வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளோம். ஒரு பொது தொகுதி உட்பட 3 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளோம். தமிழகத்தை பொறுத்தவரை மோடியின் வித்தை எடுபடாது. திமுக அரசுக்கு எதிராக எந்த கழகத்தை பூசினாலும் அது எடுபடாது. ஒவ்வொரு கட்சிகளோடும் திமுக தலைமை பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. மாற்றுக் கட்சியின் கருத்தை நான் கூற முடியாது. தேசிய அளவிலான கட்சி என்பதன் அடிப்படையில் காங்கிரஸ் தனது கோரிக்கையை முன் வைத்துள்ளது. இதில் நான் கருத்து கூற முடியாது.

திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் பயணிக்கும்

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இழுபறி இருந்தாலும், காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் பயணிக்கும். இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக தேர்தலில் சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்ட பின்னர் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும். ராஜ்யசபா சீட்டு விவகாரம் தொடர்பாக நாங்கள் எதுவும் பேசவில்லை. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற நிலைப்பாட்டில் சிறிதளவும் மாற்றம் கிடையாது. ஆனால், தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில் அதற்கான காலம் கனிய வில்லை. இதனால், தற்போதைய சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வலிமைக்கு ஏற்ப தொகுதிகள் வேண்டும் என்று மட்டுமே கோரிக்கை வைத்துள்ளோம். அதிகார பகிர்வு குறித்து எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: திமுக அளிக்கும் 25 இடங்களை ஏற்ககூடியது அல்ல… கிரிஷ் சோடங்கரின் பேச்சால் பரபரப்பு

Follow Us
Related Stories
Thousand Lights Election 2026: 2026 தேர்தலை நோக்கி ஆயிரம் விளக்கு தொகுதி.. திமுகவின் கோட்டை தொடருமா?
தஞ்சாவூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்துக்கு க்ரீன் சிக்னல்… பரபரக்கும் தேர்தல் களம்… என்ன பேசப்போகிறார் விஜய்!
பக்கா ப்ளானோடு டெல்லி புறப்பட்ட எடப்பாடி… அமித் ஷாவை சந்தித்து முக்கிய ஆலோசனை… அதிரடியில் அதிமுக கூட்டணி!
சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் கனிமொழி? தென் மாவட்ட வாக்குகளை வளைக்க திட்டம்.. எந்த தொகுதி தெரியுமா!
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வருகை தந்த முதல் பிரதமர் நரேந்திர மோடி!
சூடு பிடிக்கும் தேர்தல் களம்… பல்வேறு வண்ணங்களில் தீவிரமாக தயாராகும் கட்சி கொடிகள்!
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ