கொளத்தூர் கோட்டையில் சரிந்த திமுக.. மு.க.ஸ்டாலினை வீழ்த்தி தவெக வேட்பாளர் வரலாற்று வெற்றி!
Kolathur Constituency MK Stalin Defeat: சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் தலைவர் மு. க. ஸ்டாலின் தோல்வியை தழுவி உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி. எஸ். பாபு 80,407 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதில், 84.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த வாக்குகள் அனைத்தும் இன்று திங்கள் கிழமை காலை 8 மணி முதல் எண்ண தொடங்கியது. இதில், ஆரம்பம் முதலில் திராவிட முன்னேற்ற கழகம் பெறும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அதன்படி, திமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர்கள் போட்டியிட்ட பெருவாரியான தொகுதிகளில் தோல்வியை தழுவினர். அந்த வகையில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க ஸ்டாலின் போட்டியிட்டு இருந்தார்.
ஆரம்பம் முதலே பின்னடைவை சந்தித்த மு.க.ஸ்டாலின்
ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் வி. எஸ். பாபு தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இதில், தவெக வேட்பாளர் வி. எஸ். பாபு 64,714 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். மு க ஸ்டாலின் 57,165 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து இருந்தார், அதிமுக வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் 13,65 வாக்குகள் பெற்றிருந்தார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சௌந்தரபாண்டியன் 4518 வாக்குகள் பெற்றிருந்தார். அதன்படி, தமிழக வெற்றிக்காக வேட்பாளர் வி எஸ் பாபு, மு க ஸ்டாலினை விட 7549 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.
தவெக வேட்பாளரிடம் மு.க.ஸ்டாலின் படுதோல்வி
கொளத்தூர் தொகுதியில் மு க ஸ்டாலின் 72,988 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி. எஸ். பாபு 81,110 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர்களுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 8,122 ஆகும். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மு க ஸ்டாலின் பின்னடைவை சந்தித்து இருந்தார். பின்னர் ஒவ்வொரு சுற்று முடிவிலும் அதே நிலையை நீடித்தது. இறுதியாக 5- ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவிலும் மு க ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வந்தார்.
திமுக தொண்டர்கள் இடையே பெரும் கலக்கம்
இதில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்காக வேட்பாளர் வி. எஸ். பாபு தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். தற்போது, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இறுதி வாக்கு எண்ணிக்கை சுற்றில் மு க ஸ்டாலின் தோல்வியை தழுவியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வி எஸ் பாபு வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த வெற்றியானது அரசியல் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்தின் முதல்வரும், திமுகவின் தலைவருமான மு க ஸ்டாலின் தோல்வியை சந்தித்து இருப்பது திமுக தொண்டர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த வி.எஸ்.பாபு
வி. எஸ். பாபு புரசைவாக்கத்தில் 2006 ஆம் ஆண்டு திமுக எம்எல்ஏவாக இருந்தார். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் மு. க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தார். பின்னர் வடசென்னை திமுக மாவட்ட செயலாளராகவும் பதவி வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து அதிமுகவில் இணைந்த வி.எஸ். பாபு, பின்னர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வெற்றியை பதிவு செய்துள்ளார்.