திமுக கூட்டணிக்கு ஆதரவாக மல்லிகார்ஜூன கார்கே பரப்புரை!

Mallikarjun Kharge Campaign : தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார் கே ஓசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார் .

திமுக கூட்டணிக்கு ஆதரவாக மல்லிகார்ஜூன கார்கே பரப்புரை!

திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை

Updated On: 

19 Apr 2026 19:52 PM

 IST

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ( (ஏப்ரல் 19) பரப்புரை மேற்கொண்டனர். இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: தமிழகத்தை சேர்ந்த எம். பி. கள் மற்றும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆகியோரின் ஆதரவால் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரை மசோதா தோல்வி அடைந்துள்ளது. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சமூக நீதி போராளியாக செயல்பட்டு வருகிறார். சுயமரியாதை, சமத்துவம் ஆகியவற்றை எடுத்துரைத்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. கடந்த 2023- ஆம் ஆண்டு கொண்டு வந்த மசோதாவை ஏன் அமல்படுத்தவில்லை.

மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறை

மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறு வரையை மத்திய அரசு செயல்படுத்த இருந்தது. தமிழக மக்களுக்கு தீமை செய்யும் மோடி வேண்டுமா அல்லது நன்மை செய்யும் மு. க. ஸ்டாலின் வேண்டுமா. ஸ்டாலின் வேண்டுமென்றால் நீங்கள் காங்கிரஸ் வாக்களிக்க வேண்டும். திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பெண்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறோம். எனவே, நீங்கள் அனைவரும் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால் மோடி அமைதியாகி விடுவார்.

மேலும் படிக்க: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போடக்கூடிய வாக்கு – தமிழக வளர்ச்சிக்கான தடைக்கல்.. முதல்வர் ஸ்டாலின்..

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்க் கட்சிகள் ஆதரவு

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்தது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கிடையாது. அது மக்களவைத் தொகுதி மறுவரை மசோதாவாகும். கடந்த 2023- ஆம் ஆண்டு மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்க் கட்சிகளாகிய நாங்கள் ஆதரவு அளித்தோம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடை பயணம் மேற்கொண்டார். பிரதமர் மோடி இதுபோல நடைபயணம் மேற்கொண்டாரா. நாங்கள் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி தலைமையில் ஒன்றிணைந்துள்ளோம்.

தொகுதி மறுவரையரை மசோதோ தோல்வி

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருதி மக்கள் தொகையை குறைத்தோம். திமுக அரசு வாக்குறுதியை அளித்துவிட்டு மட்டும் இருந்துவிடாமல், அதை நிறைவேற்றி உள்ளது என்று தெரிவித்தார். மத்திய பாஜக அரசு நாட்டில் மக்களவை தொகுதிகளை மறுவரையை செய்வதற்கான சட்டத்தை கடந்த சில நாள்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இதில், 320 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 298 பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதனால், அந்த மசோதா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கடந்த 5 ஆண்டுகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பலனை அனுபவிக்கிறார்கள் – பிரதமர் மோடி விமர்சனம்..

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..