அதிமுக வசமிருந்த 19 தொகுதிகளில் களம் காணும் பாஜக… எதற்காக இந்த திட்டம்… பின்னணி என்ன!
BJP Contest Constituencies: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட தொகுதிகளில் 19 தொகுதிகளி பாஜக போட்டியிட உள்ளது. இதில், பாஜக வசம் இருந்த இரு தொகுதிகளை அதிமுக பெற்றுள்ளது. எதற்காக இந்த மாற்றம். இதில், என்ன பின்னணி உள்ளது.

அதிமுக வசமிருந்த தொகுதிகளில் போட்டியிடும் பாஜக
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கக் கூடிய கட்சிகளுக்கான தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டதுடன், அந்த கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், பாரதீய ஜனதா கட்சிக்கு 27 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தது. இதில், நாகர்கோவில், திருநெல்வேலி, கோயம்புத்தூர் தெற்கு, மொடக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது, ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் மொடக்குறிச்சி மற்றும் நாகர்கோவில் ஆகிய தொகுதிகள் மட்டுமே பாஜகவுக்கு கிடைத்துள்ளது. திருநெல்வேலி, கோவை தெற்கு ஆகிய தொகுதிகளை அதிமுக தன் வசம் வைத்துக் கொண்டது.
அதிமுக வசம் சென்ற பாஜக போட்டியிட்ட 12 தொகுதிகள்
இதே போல, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிட்ட தொகுதிகளான திருக்கோவிலூர், ஆயிரம் விளக்கு, கோவை தெற்கு, துறைமுகம், திட்டக்குடி, திருநெல்வேலி, மதுரை வடக்கு, காரைக்குடி, விருதுநகர், தாராபுரம், அரவக்குறிச்சி, திருவையாறு ஆகிய 12 சட்டமன்ற தொகுதிகளை பாஜக பெறாமல் அதிமுக வசம் சென்றுள்ளது. இதற்கு பதிலாக, திருப்பூர் தெற்கு, கோயம்புத்தூர் வடக்கு, மயிலாப்பூர், திருப்பத்தூர், அவிநாசி, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ( தனி), மானாமதுரை ( தனி), ராசிபுரம் ( தனி), அறந்தாங்கி.
அதிமுகவிடம் இருந்து பாஜக பெற்ற 19 தொகுதிகள்
திருவாரூர், பத்மநாபபுரம், வாசுதேவநல்லூர் ( தனி), ஆவடி, ராதாபுரம், மதுரை தெற்கு, தஞ்சாவூர், திருச்செந்தூர், மயிலாப்பூர் ஆகிய 19 சட்டமன்ற தொகுதிகளை புதிதாக பாஜக பெற்றுள்ளது. இந்த தொகுதிகள் அனைத்தும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட தொகுதிகள் ஆகும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே, அதிமுக தலைமையிடம், பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இந்த தொகுதிகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இரு தொகுதிகளை தன்வசப்படுத்திய அதிமுக
அதே வேளையில், திருநெல்வேலி மற்றும் கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் அதிமுகவுக்கு செல்வாக்கு இருப்பதாக தெரிகிறது. அதனால், அந்த தொகுதிகளை தங்கள் கட்சியின் வேட்பாளருக்கு விட்டு தர வேண்டும் என்று வலியுறுத்தியதன் அடிப்படையில், அந்த இரு தொகுதிகளை அதிமுக தன் வசப்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. அதன் அடிப்படையில், பாஜக தனது கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை விரைவில் அறிவிக்க உள்ளது. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
மேலும் படிக்க: கமலின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும். டார்ச் லைட்டுக்கு அனுமதி – மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை