தமிழக காங்கிரஸ் அழிவுக்கு செல்வப்பெருந்தகையே சான்று…அண்ணாமலை நேரடி அட்டாக்!

Bjp Former Leader Annamalai Latest Pressmeet: தமிழக காங்கிரஸில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் குறித்தும், இந்தக் கட்சியின் அழிவுக்கு அதன் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு சான்று என்று பா. ஜ. க. முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

தமிழக காங்கிரஸ் அழிவுக்கு செல்வப்பெருந்தகையே சான்று...அண்ணாமலை நேரடி அட்டாக்!

காங்கிரஸ் அழிவுக்கு செல்வப்பெருந்தகை சான்று

Published: 

02 Jan 2026 16:55 PM

 IST

காங்கிரஸ் கட்சியில் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதி மணி எம்.பி. ஆகியோரின் கருத்துக்களால் உள் கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வேலூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வகையான போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் அதிக அளவு போதை பொருட்கள் ஊடுருவுவதாக மத்திய அரசு மீது முதல்வர் மு. க. ஸ்டாலின் பழி போட்டுள்ளார். திமுக ஆட்சியில் கஞ்சா புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வன்முறை உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. எனவே, தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் நான் தோற்றுவிட்டேன் என்று முதல்வர் கூற வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டதுடன், கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலா தலங்களை மையமாக வைத்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தமிழக காங்கிரஸில் இரு கோஷ்டி

தமிழக காங்கிரசில் டெல்லி தலைமைக்கும், முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும் ஜால்ரா போடும் இரண்டு அணிகளாக உள்ளது. இதில், தமிழக மக்களுக்காக பேசும் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கிடையாது. காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபர் விஜயை சந்தித்து விட்டு தமிழகத்தின் கடன் சுமை குறித்து பேசி உள்ளார். இவர் மீது காங்கிரஸ் கட்சியை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இவர்களை போல ராகுல் காந்தி, ஜோதிமணி, தமிழக காங்கிரஸ் வெவ்வேறு கருத்துக்களை கூறி வருகிறது.

மேலும் படிக்க: “அண்ணன் வைகோவுக்கு 82 வயதா அல்லது 28 வயதா?”.. சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு

காங்கிரஸ் கட்சியின் அழிவுக்கு செல்வப்பெருந்தகையை சான்று

எனவே, காங்கிரஸ் என்ற கட்சியை இழுத்து மூட வேண்டும். காங்கிரஸ் கட்சியில் உள்ள நல்லவர்கள் அனைவரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அழிந்து வருவதற்கு அந்த கட்சியின் தலைவரை ஒரு சான்றாகும். கேரள மாநிலத்தில் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது அந்த மாநில மக்கள் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கை எடுத்துக் காட்டுகிறது. கம்யூனிஸ்ட் கோட்டையான கேரளாவில் தாமரை மலர்ந்துள்ளது. இதனால், பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசியல் திருப்பு முனையாக பாஜக மாநாடு

தமிழகத்தின் அரசியல் திருப்பு முனையாக புதுக்கோட்டை பாஜக மாநாடு இருக்கும். திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர். தமிழகத்தை யார் மாற்றுவார்கள், முன்னேற்றுவார்கள் என்பது குறித்து தமிழக மக்கள் முடிவு எடுக்கட்டும். தேசிய ஜனநாயக கூட்டணி மீது தமிழக மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கையானது 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் பிரதிபலிக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: மதிமுக அழைப்பிதழில் பிரபாகரன் படம் தான் காரணமா?..வைகோ நிகழ்ச்சியை புறக்கணித்த காங்கிரஸ்..

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கடைசி நாள்.. யாருக்கு இது கட்டாயமில்லை?
துரந்தர் 2 இன்னும் பயங்கரமாக இருக்கும்.... - ராம் கோபால் வர்மா சர்ப்ரைஸ் தகவல்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பில் சந்தேகம் - உத்தப்பாவின் பேச்சால் சர்ச்சை
தோனியின் காரில் இருந்த சிகரெட் பாக்ஸ் - வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி