இன்னும் ஓரிரு நாட்களில் களத்தில் உங்களை சந்திப்பேன் – மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்..

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வடக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக பாஜக நிர்வாகிகள் அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், வானதி ஸ்ரீனிவாசன் வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்று காரணமாக கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் களத்தில் உங்களை சந்திப்பேன் - மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்..

கோப்பு புகைப்படம்

Published: 

13 Apr 2026 17:01 PM

 IST

ஏப்ரல் 13, 2026: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், மருத்துவமனையில் இருந்தபடியே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “இன்னும் ஓரிரு நாட்களில் களப்பணியில் மீண்டும் இணைவேன்” என குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளதால், தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தலைவர்கள், வேட்பாளர்கள் என அனைவரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வானதி சீனிவாசன்:

அந்த வகையில், கோவை வடக்கு தொகுதி வேட்பாளரான வானதி ஸ்ரீனிவாசன் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த அவர் தனது பிரச்சாரத்தை தொடங்கி மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வடக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக பாஜக நிர்வாகிகள் அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் படிக்க: நாளை திருப்பூரில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ.. காவல்துறை அனுமதி!

பின்னர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், வானதி ஸ்ரீனிவாசன் வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்று காரணமாக கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இரண்டு நாட்கள் முழு ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரது பிரச்சாரங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: அய்யா ராமதாஸ் பூரண குணமடைந்து, மீண்டும் பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டுகிறேன் – திமுக தலைவர் ஸ்டாலின்..

மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்:

இந்த சூழலில், மருத்துவமனையில் இருந்தபடியே வானதி ஸ்ரீனிவாசன் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், “உங்களது அன்பால் விரைவில் உடல்நலம் தேறி வருகிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் உங்களை நேரில் சந்திக்க இருக்கிறேன். தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற வேண்டும். எனக்காக தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வரும் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று மாலை பாரத பிரதமர் நரேந்திர மோடி ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற நிகழ்ச்சியில் பூத் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாட உள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?