Anitha R. Radhakrishnan Tamil Nadu Election: கட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை… திருச்செந்தூர் தொகுதியில் தொடர் வெற்றி… வெற்றி வாகை சூடுவார அனிதா ராதாகிருஷ்ணன்!

Tamil Nadu Elections 2026: அதிமுகவில் இருந்த போதிலும் திருச்செந்தூர் தொகுதியில் தொடர் வெற்றி, திமுகவில் இருக்கின்ற போதிலும் திருச்செந்தூர் தொகுதியில் தொடர் வெற்றி. கட்சி மாறினாலும் காட்சி மாறாத தொகுதி. மீண்டும் இதே தொகுதியில் வெற்றி வாகை சூடுவாரா அனிதா ராதாகிருஷ்ணன்.

Anitha R. Radhakrishnan Tamil Nadu Election: கட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை... திருச்செந்தூர் தொகுதியில் தொடர் வெற்றி... வெற்றி வாகை சூடுவார அனிதா ராதாகிருஷ்ணன்!

திருச்செந்தூர் தொகுதியில் வாகை சூடுவாரா அனிதா ராதாகிருஷ்ணன்

Published: 

03 Apr 2026 11:43 AM

 IST

தமிழகத்தில் திமுகவில் கால்நடை வளம் மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்து வருபவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர், 1952- ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி பிறந்தார். தனது இளமை காலத்தில் அதிமுக மீதான பற்றின் காரணமாக அந்த கட்சியில் இணைந்தார். பின்னர் கட்சி பணியாற்றி பல்வேறு பொறுப்புகளுக்கு உயர்ந்தார். அத்துடன் அவருக்கு 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவானார். பின்னர், 2006- இல் மீண்டும் அதே தொகுதியில் களமிறக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தனது வெற்றியை நிலை நிறுத்தினார். பின்னர், அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக அந்த கட்சியில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டார். பின்னர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை

பின்னர், 2009 இடைத் தேர்தல் 2011, 2016, 2021 ஆகிய சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் களமிறக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தனது வெற்றியை தன் வசப்படுத்திக் கொண்டார். 2009 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதுடன், 2011 சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு எதிரான அலை வீசிக்கொண்டிருந்த போதிலும், திருச்செந்தூர் தொகுதியில் தனது செல்வாக்கால் வெற்றியை தக்க வைத்துக் கொண்டார் அனிதா ராதாகிருஷ்ணன். ராதா கிருஷ்ணன் கடந்த 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் களமிறங்கிய போது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ். ஜெனிபர் சந்திரனை வீழ்த்தி 54.30 சதவீத வாக்குகள் பெற்றார்.

மேலும் படிக்க: Udhayanidhi Stalin Tamil Nadu Election: முதல் தேர்தலில் அமோக வெற்றி… குறுகிய காலத்தில் அரசியல் சக்தியாக உருவெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

திருச்செந்தூர் தொகுதியில் தொடர் வெற்றி

2006 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் களமிறங்கிய அனிதா ராதாகிருஷ்ணன் திமுக வேட்பாளர் எ. டி. கே. ஜெயசீலனை வீழ்த்தி 52.52 சதவீத வாக்குகள் பெற்றார். 2009 சட்டமன்ற இடைத்தேர்தலில் இதே தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கிய அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக வேட்பாளர் அம்மன் டி. நாராயணனை வீழ்த்தி 67.81 சதவீதம் வாக்குகள் பெற்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி. ஆர். மனோகரனை வீழ்த்தி 47.07 சதவீத வாக்குகள் பெற்றார். 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சரத்குமாரை வீழ்த்தி 52.97 சதவீத வாக்குகள் பெற்றார்.

அனிதா ராதாகிருஷ்ணன் வசமாகும் திருச்செந்தூர் தொகுதி

இதே போல, 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் எம். ராதாகிருஷ்ணனை வீழ்த்தி 50. 58 சதவீத வாக்குகள் பெற்று மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்து வருகிறார். திருச்செந்தூர் தொகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் இதே தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் தேர்தலில் தனது வெற்றியே பறைசாற்றுவார் என்றே கள நிலவரங்கள் தெரிவிக்கிறது.

மேலும் படிக்க: கொளத்தூர் தொகுதியில் 3 முறை வெற்றி வாகை சூடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்